இந்தியா குஜராத் மாநிலம் மோடசா பகுதியைச் சேர்ந்தவர் நிலன்ஷி படேல் ( வயது 17) இவர் தனது தலைமுடியை நீளமாக வளர்த்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார். நிலன்ஷி டீன் ஏஜர் பிரிவில் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
இதற்கு முன்னர், அர்ஜென்டினா நாட்டைச் சேர்ந்த ஏபிரில் 152.5 சென்டி மீட்டர் முடி வளர்த்து சாதனை படைத்தார். பிறகு அந்த சாதனையை கெயிட்டோ என்ற பெண் 155.5 சென்டி மீட்டர் நீள தலைமுடி வளர்த்து முறியடித்தார். இந்த 2 சாதனைகளையும் 2018-ல் நிலன்ஷி முறியடித்தார்.
2018-ல் நிலன்ஷியின் முடி 170 செ.மீட்டர் இருந்த நிலையில் கின்னஸில் இடம் பிடித்தார். தற்போது 190 சென்டி மீட்டர் உயர்ந்து புதிய சாதனை படைத்துள்ளார். நிலன்ஷி 190 சென்டி மீட்டர் வரை தலைமுடி வளர்த்து தனது சாதனையை அவரே முறியதுடித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், நான் எங்கு சென்றாலும் மக்கள் என்னுடன் செல்ஃபி எடுக்க முயற்சிக்கின்றனர். நான் ஒரு செலிப்ரட்டி போல் உணர்கிறேன் என கூறினார்.

No comments: