News Just In

1/16/2020 06:06:00 PM

திருப்பெருந்துறை ஸ்ரீ முருகன் வித்தியாலய மாணவர் வரவேற்பு நிகழ்வு


இன்று பல பாடசாலைகளில் தரம் ஒன்றில் கல்வி கற்கும் மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு நாடளாவிய ரீதியில் நடைபெற்றது. மட்டக்களப்பு மாநகரத்திற்கு உட்பட்ட திருப்பெருந்துறை ஸ்ரீமுருகன் வித்தியாலயத்தில் மாணவர் வரவேற்பு நிகழ்வு பாடசாலை அதிபர் தலைமையில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவன், மாநகர சபை உறுப்பினர், மட்டக்களப்பு கல்வி வலயத்தின் ஆசிரிய வாண்மை விருத்தி நிலையத்தின் முகாமையாளர் சச்சிதானந்தம், ஆரம்பப் பிரிவிற்கு பொறுப்பான ஆசிரிய ஆலோசகர் திருமதி பூபாலசிங்கம், மாநகர சமூக மேம்பாட்டு உத்தியோகத்தர் சந்திரகுமார், ஆலய பூசகர், மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.

இந் நிகழ்வின் போது மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட புறநகர் பகுதிகளில் உள்ள மாணவர்களின் கல்வி தரத்தினையும், அவர்களின் கற்றலின் மீதான ஆர்வத்தினையும் அதிகரிக்கும் நோக்கில் மட்டக்களப்பு மாநகர சபையினால் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.















No comments: