News Just In

1/16/2020 06:50:00 PM

ரஞ்சன் ராமநாயக்கவுடன் தொலைபேசி உரையாடல்-நீதிபதி உடனடியாக பதவி நீக்கம்!


நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுடன் சர்ச்சைக்குரிய தொலைபேசி உரையாடலில் ஈடுபட்டதாக குறிப்பிடப்படும் நீதிபதி தம்மிக்க ஹேமபாலவை சேவையிலிருந்து உடனடியாக இடைநிறுத்துவதற்கு நீதிச்சேவை ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

ரஞ்சன் ராமநாயக்கவின் தொலைபேசி உரையாடல் பதிவுகள் அண்மையில் வெளியாகியிருந்தன. இதில் மூன்று நீதிபதிகளின் குரல் பதிவுகள் இடம்பெற்றிருந்தன.

நீதிபதிகள் தம்மிக்க ஹேமபால, கிஹான் பிலப்பிட்டிய, பத்மினி ரணவக்க ஆகியோரின் குரல் பதிவுகள் இருந்ததாக குறிப்பிடப்படுகிறது.

இதேவேளை, நீதிபதி திகான் பிலாப்பிட்டிய தொடர்பாக மேலதிக நடவடிக்கைக்காக நீதிச்சேவை ஆணைக்குழுவினால், ஜனாதிபதிக்கு பரிந்துரையொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அரசியலமைப்பின் 112ஆவது பிரிவு (அ) அவரால் மீறப்பட்டுள்ளதாக அந்த பரிந்துரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுடன் தொலைபேசியில் உரையாடியதாகக் கூறப்படும் நீதிபதிகளிடம் தாமதமின்றி வாக்குமூலங்களை பெற்றுக்கொள்ளுமாறு கொழும்பு குற்றவியல் பிரிவின் பணிப்பாளருக்கு சட்டமா அதிபர் இன்று இந்த உத்தரவு பிறப்பித்திருந்தார்.

அதற்கமைய முன்னாள் நீதிபதி பத்மினி ரணவக்க, நீதிபதி கியான் பிலபிடிய மற்றும் நீதவான் ஹெமலதாவிடம் வாக்குமூலம் பெறுமாறு உத்தரவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: