
40ஆம் அத்தியாயமான பொது மக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் 12ஆம் பிரிவின் கீழ் ஆயுதம் தாங்கிய படையின் சகல உறுப்பினர்களையும் பொது மக்களின் அமைதியினைப் பேணுவதற்காக அனைத்து மாவட்டங்களிலும் பணிகளில் ஈடுபடுத்துவதற்கான உத்தரவு தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.
இதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கையெழுத்துடன் இன்று முதல் (டிசம்பர் 22 ஆம் திகதி) நடைமுறைக்கு வரும் வகையில் வெளியிடப்பட்டுள்ளது.


No comments: