News Just In

12/22/2019 08:53:00 PM

வெருகலில் 20 வீடுகள் சேதம்-40க்கும் மேற்பட்டவர்கள் இடைத்தங்கல் முகாமில்


திருகோணமலை வெருகல் பிரதேசத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் வெள்ளம் காரணமாக இருபது வீடுகள் சேதமடைந்துள்ள நிலையில் 40க்கும் மேற்பட்டவர்கள் இடைத்தங்கல் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக வெருகல் பிரதேச செயலாளர் கே. குணநாதன் தெரிவித்தார்.

இன்று (22) மாலை 5.30 மணி வரைக்கும் மாவடிச்சேனை- வட்டவான் போன்ற கிராமங்களில் வெள்ளநீர் புகுந்துள்ள மையினால் 25 குடும்பங்களைச் சேர்ந்த 60-க்கும் மேற்பட்டவர்கள் மாவடிச்சேனை அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் பிரதேச செயலாளர் தெரிவித்தார்.

அத்துடன் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மகாவலி கங்கையின் நீர் மட்டம் உயர்வடைந்துள்ளதால் கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட சோலை வெட்டுவான், மயிலப்பன் சேனை, பூவரசன் தீவு, மஜீத் நகர், கண்டல்காடு மற்றும் தீனேறி மூன்று பகுதிகள் வெள்ள நீரினால் பாதிக்கப்பட்டுள்ளது இதனால் இப்பகுதியில் உள்ள மக்களை அவதானமாக இருக்குமாறும் கிண்ணியா பிரதேச செயலாளர் முஹம்மது கனி கோரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை கந்தளாய் குளத்தின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதால் வான் கதவுகளை திறக்க உள்ளதாகவும் மத்திய நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள வெறுகல் மாவடிச்சேனை மக்களுக்கான சமைத்த உணவுகளை வழங்குவதற்குரிய நடவடிக்கைகளை அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் ஊடாக முன்னெடுக்க உள்ளதாகவும் பிரதேச செயலாளர் மேலும் குறிப்பிட்டார்

No comments: