News Just In

12/22/2019 11:50:00 AM

பாரிய முதலை, டொல்பின் உயிரற்ற நிலையில் மீட்பு


கிண்ணியா உப்பாறு கடற்கரை பகுதியில் முதலை ஒன்றும் , டொல்பீன் ஒன்றும் உயிரிழந்த நிலையில் நேற்று காலை மீட்கப்பட்டதாக கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர் .

இவ்வாறு மீட்கப் பட்ட இரு கடல் உயிரினங்களும் 17' அடி நீளமுடைய முதலையும் , 06 ' அடி நீளமுடைய டொல்பீனும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தற்போதைய பெய்து மழை கால நிலை காரணமாக இவ் உயிரிழப்பு ஏற்பட்டிருக்கலாம் எனவும் தெரிவிக்கப் படுகிறது.

இச் சம்பவ இடத்திற்கு வன ஜீவராசி திணைக்கள அதிகாரிகளும், கடற்படை அதிகாரிகளும் குறித்த இடத்துக்கு விஜயம் செய்து இது தொடர்பாக விசாரணைகளை மேற் கொண்டு வருகின்றனர்.

No comments: