இந்த வருடத்தில் நவம்பர் மாதம் வரையில் கலால் சட்டத்தின் கீழ் கலால் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட 43 ஆயிரத்து 13 சுற்றிவளைப்புக்கள் மூலம் 168.54 மில்லியன் ரூபா நீதி மன்றத்தின் ஊடாக தண்டப் பணமாக பெறப்பட்டுள்ளது.
42 ஆயிரத்து 979 சந்தேக நபர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட சட்ட விரோத மது பானம் போதைப்பொருள், கஞ்சா மற்றும் சட்ட விரோத சிகரட் முதலானவற்றின் பெறுமதி 500.66 மில்லியன் ரூபா என்று கலால் திணைக்கள ஆணையாளர் கப்பில குமாரசிங்க தெரிவித்துள்ளார்.

No comments: