
-ஏ.எச்.ஏ. ஹுஸைன்
தேசிய வாசிப்பு மாத விருது வழங்கலில் ஏறாவூர்ப் பற்றுப் பிரதேச சபையினால் நிருவகிக்கப்படும் நூலகங்கள் இரண்டு விருதுகளை தனதாக்கிக் கொண்டுள்ளதாக நூலகர் தவராஜா சிவராணி தெரிவித்தார்.
இலத்திரனியல் மயப்படுத்தப்பட்டுள்ள செங்கலடி பொது நூலகம், ஏறாவூர் ஆறுமுகத்தான்குடியிருப்பு நூலகம் ஆகியவற்றுக்கே இவ்விரு விருதுகளும் கிடைக்கப்பெற்று திங்கட்கிழமை 23.12.2019 கையளிக்கப்பட்டுள்ளன.
'வாசிப்பு மாதத்தில் வாசிப்புப் பழக்கம்' என்ற தொனிப்பொருளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இவ்விரு நூலகங்களுக்கும் இந்த விருதுகள் கிடைக்கபெற்றுள்ளன.
கல்வி அமைச்சும், தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபையும் (National Libraries and Documentation Service Board ) என்பன இணைந்து தேசிய வாசிப்புப் பழக்கம் பற்றிய ஆய்வை மேற்கொண்டிருந்ததோடு இந்த விருதுகளையும் வழங்கியிருந்தன.
இந்நிகழ்வில் தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபையின் தலைவர் எச். ஹேவகே, ஏறாவூர்ப்பற்றுப் பிரதேச சபையின் உப தவிசாளர் கே. ராமச்சந்திரன், செங்கலடி பொது நூலகத்தின் நூலகர் ரீ. சிவராணி உட்பட இன்னும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.



No comments: