News Just In

12/23/2019 10:36:00 AM

மக்களுக்கு எச்சரிக்கை! இரணைமடுக் குளத்தின் 10 வான் கதவுகள் திறப்பு


நாட்டில் மழையுடன் கூடிய காலநிலை தொடர்வதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதுடன் பல பிரசேசங்களில் குளங்களும் நிறைந்து அணைக்கட்டுகள் உடைப்பெடுக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், இரணைமடுக்குளத்தின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இரணைமடுக்குளத்தின் 14 வான்கதவுகளில் 10 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு இரணைமடுக்குளத்தின் 10 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதால் தாழ்நிலப்பிரதேசங்களில் வசிக்கும் மக்கள் மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

No comments: