News Just In

11/07/2019 07:37:00 AM

T10 லீக் கிரிக்கெட் தொடர்-இலங்கை வீரர்களுக்கு அதிகரிக்கும் வாய்ப்புக்கள்

இந்த மாதம் 15ஆம் திகதி ஐக்கிய அரபு இராச்சியத்தில் ஆரம்பமாகவுள்ள T10 லீக் கிரிக்கெட் தொடரில் விளையாடும் இலங்கையைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்களின் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்திருக்கின்றது.

இந்த T10 லீக் கிரிக்கெட் தொடரின் வீரர்கள் ஏலத்தில் 7 பேர் இலங்கை வீரர்கள் மாத்திரமே முன்னர் கொள்வனவு செய்யப்பட்டிருந்தனர். எனினும் இந்த கிரிக்கெட் தொடரில் விளையாட ஓப்பந்தம் செய்யப்பட்ட பாகிஸ்தான், பங்களாதேஷ் கிரிக்கெட் வீரர்களுக்கு குறித்த நாடுகளின் கிரிக்கெட் சபைகள் கடைசி நேரத்தில் அனுமதி மறுத்திருக்கின்றன. இதனால், இந்த லீக் கிரிக்கெட் தொடரில் விளையாடும் இலங்கை கிரிக்கெட் வீரர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கின்றது.

அதன்படி ஏற்கனவே 5 இலங்கை வீரர்கள் T10 லீக் கிரிக்கெட் தொடரில் மேலதிகமாக வாய்ப்பு பெற்ற நிலையிலேயே தற்போது இன்னும் 3 வீரர்களுக்கு வாய்ப்பு கிடைத்திருக்கின்றது. இதேவேளை இன்னும் மேலதிகமாக 3 வீரர்கள் இணைந்த நிலையில் T10 லீக் கிரிக்கெட் தொடரில் விளையாடும் இலங்கை கிரிக்கெட் வீரர்களின் எண்ணிக்கை தற்போது 15 ஆக அதிகரிக்கின்றது.

T10 லீக் கிரிக்கெட் தொடரில் கொள்வனவு செய்யப்பட்டிருக்கும் இலங்கை வீரர்கள் அனைவரும் தொடரில் பங்கேற்கும் 7 அணிகளுக்காக ஆடவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

T10 லீக் கிரிக்கெட் தொடரில் விளையாடும் இலங்கை வீரர்களின் விபரம்:
பங்களா டைகர்ஸ்
திசர பெரேரா
செஹான் ஜயசூரிய
கெவின் கொத்திகொட
பிரபாத் ஜயசூரிய

மரதா அரேபியன்ஸ்
லசித் மாலிங்க
தசுன் ஷானக்க
வனிந்து ஹசரங்க

டெல்லி புல்ஸ் 
குசல் பெரேரா
துஷ்மன்த சமீர
அஞ்சலோ மெதிவ்ஸ்

நோதர்ன் வொர்ரியர்ஸ்
நுவன் பிரதீப்
அசேல குணரத்ன

டீம் அபூதாபி
நிரோஷன் திக்வெல்ல

டெக்கான் கிளாடியேட்டர்ஸ் 
பானுக்க ராஜபக்ஷ

கர்நாடாக டஸ்கர்ஸ்
மலிந்த புஷ்பகுமார

No comments: