News Just In

11/07/2019 08:20:00 AM

வாட்ஸ்அப் செயலியில் அதிகமானோர் எதிர்பார்த்த புதிய அம்சம் அறிமுகம்!

பயனர்கள் தங்கள் அனுமதியின்றி குழு அரட்டைகளில் (Group Chats) சேர்க்கப்படுவதை நிறுத்த புதிய வழிகளை வாட்ஸ்அப் உருவாக்கியுள்ளது.

பயனுள்ள அரட்டைக் குழுக்கள் இருந்தாலும், பல வாட்ஸ்அப் பயனர்கள் எரிச்சலூட்டும் புதிய குழுக்களில் அனுமதியின்றி தொடர்ந்து சேர்க்கப்படுவதைக் காணலாம். இதனால் பயனர்கள் தங்கள் அனுமதியின்றி குழு அரட்டைகளில் சேர்க்கப்படுவதனை நிறுத்த வாட்ஸ்அப் புதிய வழிகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த புதிய அம்சத்தை எவ்வாறு பயன்படுத்துவது
வாட்ஸ்அப் செயலியில் காணப்படும் அமைப்பு (Settings) பகுதியில் உள்ள கணக்கு (Account) என்பதை தெரிவு செய்த பின்னர் தனியுரிமை (Privacy) என்பதனை தெரிவு செய்து காணப்படும் குழு (Groups) என்பதை தெரிவு செய்வதன் மூலம் இந்த அம்சத்தை பயன்படுத்த முடியும்.

இந்த அம்சத்தினை உங்கள் கைப்பேசியில் பெறுவதற்கு வாட்ஸ்அப் செயலியின் பதிப்பை (Version) நீங்கள் மேம்படுத்திக்கொள்ள (Update) வேண்டியது அவசியமாகும்.

No comments: