டக்கோயா போடைஸ் 30 ஏக்கர் தோட்டத்தில் தீ விபத்தில் பாதிக்கபட்டு சுமார் ஒரு வருட காலமாக தற்காலிக கூடாரங்களில் வாழ்ந்து வந்த குடும்பங்களுக்கு உடனடியாக வீடமைப்பு திட்டத்தினை ஆரம்பிக்கும் பணியினை முன்னெடுக்குமாறு சமுக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் பணிப்புரை விடுத்துள்ளார்.
நேற்றைய தினம் குறித்த தோட்ட பகுதிக்கு சென்று பாதிக்கபட்ட மக்களை சந்தித்த போது உரிய அதிகாரிகளுக்கு இந்த பணிப்புரையை விடுத்துள்ளார்.
இதன் போது அங்கு மக்களோடு மேலும் கலந்துரையாடிய அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் போடைஸ் 30 ஏக்கர் தோட்ட பகுதியில் தீடிர் என எற்பட்ட தீ விபத்து காரணமாக 24 குடியிருப்புகளை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் தமது உடமைகளை இழந்து ஒரு வருடகாலமாக தற்காலிக கூடாரங்களில் வாழ்ந்து வந்ததை நான் அறிவேன்.
எமது அரசாங்கத்தின் ஊடாக இந்த மக்களுக்கு முறையான வீடமைப்பு திட்டத்தை மேற்கொள்ள எங்களால் முடியும். ஆகையால் தான் பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிறுவனத்திற்கு பணிப்புரை விடுத்துள்ளேன் இதுவரை காலமும் இந்த மக்கள் எதிர் நோக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வினை பெற்று கொடுக்க எனக்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.
மலையக மக்கள் இனிமேலும் அச்சமடைய தேவையில்லை. எதிர்வரும் காலங்களில் மலையக மக்களின் பிரச்சினைகள் தீர்க்கபடும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
Subscribe to:
Post Comments (Atom)


No comments: