இந் நிகழ்வு வியாழக்கிழமை (21.11.2019) ஓந்தாச்சிமடம் விநாயகர் மகா வித்தியாலய அதிபர் ஆர்.புண்ணியராஜா தலைமையில் இடம்பெற்றது. நிகழ்விற்கு இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தவிசாளர் சாணக்கியன் கலந்து கொண்டார். இதன்போது வறிய மாணவர்கள் 32 பேருக்கு ஆயிரம் ரூபாய் பெறுமதியான வங்கிக் கணக்கு புத்தகங்கள் வழங்கிவைக்கப்பட்டன.
இதன் போது இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தவிசாளர் சாணக்கியன் கருத்து தெரிவிக்கையில் இப்பாடசாலையில் காலை ஒன்று கூடலானது தமிழ் மற்றும் ஆங்கிலம் மொழியில் நிகழ்த்தப்படுகின்றது. ஆங்கில மொழி சர்வதேச மொழியாக இருப்பதனால் அதற்கு முக்கியத்துவம் கொடுப்பது எமது பகுதியில் குறைவாக இருக்கிறது.
இப்பாடசாலையில் ஒன்று கூடலானது ஆங்கில மொழியில் நிகழ்த்தப்படுவது பாராட்டத்தக்க விடயம். மேலும் கூடிய நேரம் ஆங்கில மொழியில் இவ்வாறான விடயங்களை செய்தால் மாணவர்களுக்கு ஊக்கப்படுத்துவதாக இருக்கும். ஆங்கில மொழியினை கற்றுக் கொள்ளவும் இலகுவாக இருக்கும். மேலும் பத்தாயிரம் வைப்பு செய்யும் மாணவர்களுக்கு இராசமாணிக்கம் மக்கள் அமைப்பினால் 10% மேலதிகமாக வைப்பு செய்யப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.





No comments: