ஏழாவது ஜனாதிபதி தேர்தலின் போது வழங்கிய உறுதி மொழிகள், கொள்கைகளை முதலாவது அமைச்சரவை கூட்டத்தில் இருந்து நாம் நடைமுறைப்படுத்துவோம் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் கொள்கைகளை நடைமுறைப்படுத்தி அரசாங்க அதிகாரிகளை பாதுகாப்பதற்கு புதிய சட்டம் நிறைவேற்றப்படும் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.
குருநாகல் ரண்வெலகெதர ஸ்ரீபோதிக்கு அருகாமையில் நிர்மனிக்கப்பட்டுள்ள புதிய தாம் - அறநெறி பாடசாலை கட்டிடத்தை திறந்து வைக்கும் நிகழ்வின் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.
நேற்று நடைபெற்ற இந்த நிகழ்வின் போது அமெரிக்காவின் தலைமை சங்கநாயக்க சங்கைக்குரிய கடுகஸ்தொட்ட உபரத்ண தேரரை சந்தித்து அவரது சேம நலன்களை பிரதமர் கேட்டறிந்தார். இதனைத் தொடர்ந்து வர்த்தகரான ரஞ்ஜித் வீரசிங்வின் நன்கொடையினால் நிர்மானிக்கப்பட்டுள்ள இந்த பாடசாலை கட்டிடத்தை பிரதமர் திறந்து வைத்தார்.
இந்த நிகழ்வில் வீதி, பெருந்தெருக்கள் துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நாம் கடந்த காலங்களில் அரசாங்கத்தின் திட்டங்களை நடைமுறைப்படுத்தினோம். கடந்த அரசாங்கத்தில் இவ்வாறான அதிகாரிகள் பழிவாங்கப்பட்டனர். இத்தகைய நிலையில் இருந்து அரச அதிகாரிகள் பாதுகாக்கப்பட வேண்டும். இதற்காக இவர்கள் தொடர்பில் விசேட சட்டம் கொண்டு வரப்படவேண்டும். இதற்கு நாம் நடவடிக்கை மேற்கொள்வோம்.
இது தற்காலிக அரசாங்கம். எமக்கு பாரிய பொறுப்பு உண்டு. இது 15 அமைச்சர்களைக் கொண்ட அராசங்கம். 15 அமைச்சர்களை தெரிவுசெய்வதில் சிரமங்கள் உள்ளன. அமைச்சரவை 15 ஆக குறையும் போது மாகாண சபை 4 இல் 1 ஆக குறையும். இதன் போது பிரச்சினைகள் உண்டு என்பதை நாம் அறிவோம்.
தகுதியானவர்கள் இருக்கின்றார்கள். தகுதியானவர்களுக்கு இந்த 15 ஆல் பிரச்சினை ஏற்பட்டது. இவர்களது வேதனையை நாம் அறிவோம். இருப்பினும் நாட்டுக்கு நன்மை கிடைக்குமாயின் நாட்டுக்காக இவர்கள் அர்பணிக்க தயாராக இருப்பதாக தெரிவித்தனர். இவர்கள் தெரிவித்த இந்த கூற்றை நாம் பாராட்டுகின்றோம்.
மக்களின் நலனுக்காக நாம் அனைத்தையும் செய்ய தயாராக உள்ளோம். தற்பொழுது பாராளுமன்றத்தில் அரசாங்கத்திலும் பார்க்க எதிர் கட்சிக்கு அங்கத்தவர்கள் அதிகம் உள்ளனர். இந்த நிலையில் நாம் பொது தேர்தலுக்கு செல்லவுள்ளோம். எதிர் கட்சியினரும் ஒத்துழைப்பு வழங்க முன்வந்துள்ளனர். மக்கள் எமக்கு ஆணையை வழங்கியுள்ளனர் என்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மேலும் தெரிவித்தார்.
Subscribe to:
Post Comments (Atom)

No comments: