நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை காரணமாக டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதன் காரணமாக கொழும்பு, கம்பாஹா, மாத்தளை, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் சிறப்பு டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படும் என தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த திட்டம் நவம்பர் 27ஆம் திகதி முதல் டிசம்பர் 02ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் இயக்குநர் டாக்டர் அருணா ஜெயசேகர தெரிவித்தார். மேலும் டெங்கு நுளம்புகள் பரவும் வகையில் சூழலை வைத்திருப்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
இந்த ஆண்டு இதுவரை 73,601 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதுடன் 92 உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments: