அவர் குறித்த விடயம் தொடர்பில் மேலும் கூறுகையில் நான் சுகாதார இராஜாங்க அமைச்சராக இருந்த காலப்பகுதியில் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் என்னால் முடிந்தளவு பல அபிவிருத்திப் பணிகளை நான் செய்திருக்கிறேன்.
அவற்றுள் ஒன்றுதான் ஐந்து மாடிகள் கொண்ட அவசர விபத்துச் சேவை பிரிவுக் கட்டடமும் ஆகும். இந்தக் கட்டடத்தை நிர்மாணிப்பதற்காக நான் எடுத்த நடவடிக்கைகள் அதற்காக பட்ட கஷ்டம், ஓடிய ஓட்டம் எல்லாவற்றையும் அறிந்தவர்கள் என்னோடு இருந்தவர்களுக்கு மட்டுமே நன்றாகத் தெரியும்.
ஒப்பந்தக்காரரின் முறையற்ற செயற்பாடே அதற்கான காரணமாகும். அவரை நிறுத்தி வேறு ஒரு ஒப்பந்தக்காரரிடம் இந்தப் பணியை ஒப்படைப்பதற்கு சுகாதார அமைச்சின் செயலாளர் நடவடிக்கை எடுத்துள்ளார் என்று முன்னாள் சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் தெரிவித்தார்.
குறித்த ஒப்பந்தக்காரரிடம் 7 வைத்தியசாலைகளின் கட்டட நிர்மாணப் பணிகள் ஒப்படைக்கப்பட்டன. அதில் 4 வைத்தியசாலைகளை அவர் நிர்மாணிக்கவில்லை. 3 வைத்தியசாலைகளை அரைகுறையாக நிர்மாணித்துள்ளார். இந்த உண்மை எதுவும் தெரியாமல் இப்போது சிலர் என்மீது குற்றச்சாட்டுக்களை முன்வைத்து இந்த நிர்மாணப் பணி இடம்பெறாமைக்கு நானே காரணம் என்றும் சிலர் கூறுவது தவறானது.

நிர்மாணப் பணியைத் துரிதப்படுத்துவதற்காக நான் அமைச்சிலிருந்து 200 மில்லியன் ரூபாவை இரண்டு கட்டங்களாக அந்த ஒப்பந்தக்காரருக்கு முற்பணமாகப் பெற்றுக்கொடுத்தேன்.
அந்த ஒப்பந்தக்காரர் துளை இடுவதற்காக முதலில் சீன நிறுவனம் ஒன்றைப் பணிக்கு அமர்த்தினார். அந்த நிறுவனத்துக்கு இவர் பணம் கொடுக்காததால் அவர்கள் சென்றுவிட்டனர். பின்னர் ஜேர்மனி நிறுவனம் ஒன்றை அமர்த்தினார். அந்த நிறுவனத்துக்கும் பணம் கொடுக்கவில்லை. அவர்களும் சென்றுவிட்டனர். இதனால் பணி தாமதமானது.
இந்தப் பிரச்சினை சுகாதார அமைச்சின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டதும் அமைச்சின் அதிகாரிகள் இது தொடர்பில் ஆராய்ந்து பார்த்தனர். அதில் ஒப்பந்தக்காரர் முறைகேடாக நடந்துகொண்டமை தெரிய வந்தது. இதனால் அவரிடமிருந்து ஒப்பந்தம் மீளப் பெறப்பட்டது.
பின்னர் வேறு ஒரு ஒப்பந்தக்காரரிடம் இந்தப் பணியை ஒப்படைப்பது என்று தீர்மானித்து அதற்காக புதிய கேள்வி மனுவைக் கோருவதற்கு சுகாதார அமைச்சின் செயலாளர் அண்மையில் உத்தரவு பிறப்பித்தார்.
இந்த நிலையில்தான் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் இதன் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டே தீரும். இது வரவு-செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்ட ஒன்று. நான் அமைச்சராக இல்லாவிட்டாலும் இது நடந்தே தீரும் என்றும் அவர் தெரிவித்தார்.

No comments: