இச் சந்திப்பில் மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர்களுடன் ஐரோப்பிய ஒன்றியத்தின் சர்வதேச தேர்தல் கண்காணிப்பாளர் பீட்டர் நொவட்னி கலந்துரையாடினார்.
இதன்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெறும் தேர்தல் விதிமுறை மீறல்கள், தேர்தல் வன்முறைகள், ஊடகவியலாளர்கள் மீதான அரசியல் கட்சிகளின் அழுத்தங்கள் தொடர்பாக கேட்டறிந்து கொண்டனர்.
நீண்ட கால ஐரோப்பிய ஒன்றியத்தின் சர்வதேச கண்காணிப்பாளர்களான பீட்டர் நொவட்னி ,நீனா வெஸல் ஆகியோரால் மட்டு அம்பாறை ஆகிய இரு மாவட்டச் செயலகங்கள் தேர்தல் திணைக்களங்கள் பொலிஸ் நிலையங்கள்
உள்நாட்டு கண்காணிப்பகங்கள், ஊடகவியலாளர்கள் போன்ற தேர்தலுடன் தொடர்பான பல நிறுவனங்களுடனும், நபர்களுடனும் இதுவரை கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டதுடன் மேலும் தபால் வாக்களிப்பின் போதான கண்காணிப்பினையும் செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.







No comments: