ஜக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் அமெரிக்காவுடன் செய்யவுள்ள "ஸோபா" (SOFA - Status Of Forces Agreement) மிலேனியம் உடன்படிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து மட்டக்களப்பு காந்தி பூங்காவிற்கு முன்னால் இன்று வியாழக்கிழமை (07.11.2019) கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
இலங்கை மக்கள் தேசிய கட்சியின் தலைவர் என்.விஷ்ணுகாந்தன் தலைமையில் இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதில் கலந்துகொண்ட கட்சி ஆதரவாளர்கள் அமெரிக்காவுடன் ரணில் அரசாங்கம் "ஸோபா" உடன்படிக்கை செய்து கொண்டால் எமது 12 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பு அபகரிக்கப்படும்.
கடந்த பிரேமதாசா அரசாங்கம் இந்திய இராணுவத்தினருடன் செய்து கொண்ட ஒப்பந்தம் காரணமாக வடகிழக்கில் அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர். அவ்வாறே இந்த அமெரிக்க "ஸோபா" உடன்படிக்கையினால் எமது நாடு அமெரிக்காவுக்கு அடிமையாகும் நிலையேற்படும்.

No comments: