(செங்கலடி நிருபர் சுபா)
மட்/ககு/செங்கலடி குமாரவேலியார் கிராம சித்தி விநாயகர் வித்தியாலய வருடாந்த பரிசளிப்பு விழாவும் சஞ்சிகை வெளியீட்டு நிகழ்வும் பாடசாலையின் அதிபர் திருமதி. சுதாகரி மணிவண்ணன் தலைமையில் பாடசாலையின் பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.
இந் நிகழ்விற்கு கௌரவ அதிதிகளாக ஆரம்பக்கல்வி உடற்கல்விப் பணிப்பாளர் க.யோகராஜா, பாடசாலையின் முன்னாள் அதிபரும் தற்போதைய வந்தாறுமூலை விஸ்ணுமகா வித்தியாலயத்தின் அதிபருமான எஸ்.மோகன்,
பணி முதிர்வு பெற்ற அதிபர் திருமதி. சந்தமலர் கமலநாதன் மற்றும் செங்கலடி மத்திய கல்லுரி அதிபர், கொம்மாதுறை சித்தி விநாயகர் வித்தியாலய அதிபர், வேல்ட்விசன் உத்தியோகத்தர், பாடசாலையின் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
நிகழ்வின் முதலாவது அம்சமாக 'தாமரை' சஞ்சிகை வெளியிடப்பட்டது. இதன்போது சஞ்சிகையின் முதலாவது பிரதியானது அதிதி க.யோகராஜா அவர்களிடம் கையளிக்கப்பட்டதுடன் அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்களுக்கும் சஞ்சிகை வழங்கிவைக்கப்பட்டமையும் சிறப்பம்சமாகும்.
இப் பரிசளிப்பு விழாவில் பாடசாலையில் பாடவிதானங்கள், விளையாட்டுத்துறை என பலவற்றிலும் திறமைகளை வெளிக்காட்டிய மாணவர்கள் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.













No comments: