மட்டக்களப்பு, வவுணதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தனியார் காணியிலிருந்து பெண்ணொருவர் செவ்வாய்கிழமை (05.11.2019) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
வவுணதீவு பிரதான வீதி சுற்றுவட்டத்தின் அருகிலுள்ள தனியார் காணியில் குறித்த பெண் இறந்த நிலையில் மீட்கப்பட்டதாக வவுணதீவு பொலிஸார் தெரிவித்தனர்.
மரணமடைந்த பெண் மண்முனை மேற்கு பிரதேசத்தின் ஊத்துமடு கிராமத்தைச்சேர்ந்த 80 வயதுடைய பூமணி என உறவினர்களால் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுணதீவு பொலிஸார் மட்டக்களப்பு குற்றவியல் பொலிஸாருடன் இணைந்து முன்னெடுத்துள்ளனர்.
11/06/2019 08:01:00 AM
வவுணதீவில் தனியார் காணியிலிருந்து பெண்ணொருவர் சடலமாக மீட்பு!
Subscribe to:
Post Comments (Atom)



No comments: