News Just In

11/06/2019 07:15:00 AM

புதிய லோகோவை அறிமுகப்படுத்தியுள்ள பேஸ்புக் நிறுவனம்

திங்களன்று (04.11.2019) பேஸ்புக் நிறுவனம் அதற்கான புதிய லோகோவை அறிவித்துள்ளது. ஆங்கில பெரிய எழுத்துக்களில் (Capital Letters) புதிய எழுத்துருவில் பேஸ்புக் என்ற வார்த்தையை உள்ளடக்கிய லோகோவினை அறிமுகப்படுத்தியுள்ளது.

பேஸ்புக் நிறுவனம் தனது செயலிகளான இன்ஸ்டாகிராம், வட்ஸ்அப் ஆகியவற்றிலிருந்து பேஸ்புக் செயலியினை வேறுபடுத்தி காட்டும் முகமாக இந்த நகர்வை செய்துள்ளது. இதன்படி பேஸ்புக்கிற்கு நீல நிறமும், வாட்ஸ்அப்பிற்கு பச்சை நிறமும், இன்ஸ்டாகிராமிற்கு ஊதா, சிவப்பு மற்றும் ஆரஞ்சு ஆகிய நிறங்களும் பயன்படுத்தப்படவுள்ளன.

பேஸ்புக், வாட்ஸ்அப், மெசஞ்சர், இன்ஸ்டாகிராம் மற்றும் ஓக்குலஸ்ஆகிய செயலிகள் பேஸ்புக் நிறுவனத்தின் ஒரு பகுதியாகும். இந்த நடவடிக்கை கூகிள் தன்னை ஆல்பாபெட் ஆக மாற்றியமைத்ததைப் போன்றது, ஆல்பாபெட் நிறுவனத்தில் கூகிள் ஒரு துணை நிறுவனமாகும்.

எதிர்வரும் வாரங்களில், பேஸ்புக் தமது வலைத்தளம் உள்ளிட்ட அதன் தயாரிப்புகள் மற்றும் சந்தைப்படுத்தல் பொருட்களுக்குள் புதிய பிராண்டைப் பயன்படுத்தத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தனி செயலியாக ஆரம்பிக்கப்பட்ட பேஸ்புக் தற்போது மெசஞ்சர் (Messenger), இன்ஸ்டாகிராம்(Instagram), வட்ஸ்அப்(WhatsApp), ஓக்குலஸ்(Oculus), பணியிடங்கள்(Workplace), போர்டல் (Portal) மற்றும் கலிப்ரா (Calibra) போன்ற 15 சேவைகளை பயனர்களுக்கு அளித்து வருகிறது.

No comments: