News Just In

11/05/2019 09:38:00 PM

பேருந்துடன் டிப்பர் ரக லொறி நேருக்கு நேர் மோதி விபத்து!

வெல்லவாய, தணமல்வில பிரதான வீதியில் தனியாருக்கு சொந்தமான பேருந்தொன்று டிப்பர் ரக லொறியுடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதில் 30 பேர் காயமடைந்துள்ளனர்.

மாத்தறையில் இருந்து மொனராகல நோக்கி பயணித்த குறித்த பேருந்து எதிரில் வந்த டிப்பர் லொறியுடன் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. இரண்டு வாகனங்களின் ஓட்டுனர்கள் உட்பட பேருந்தில் பயணித்தவர்களே இவ்வாறு காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் தணமல்வில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் 07 பேர் மேலதிக விசாரணைகளுக்காக அம்பிலிபிட்டிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் தணமல்வில பொலிஸார் ​மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments: