எதிர்வரும் ஐனாதிபதி தேர்தலுக்கான இரண்டாம் கட்ட அஞ்சல் மூல வாக்களிப்பின் 02ஆம் நாளாகிய இன்று சுமூகமான முறையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெற்றதாக தெரிவத்தாட்சி அலுவலர் மாணிக்கம்உதயகுமார் தெரிவித்தார்.
மாவட்ட செயலகத்தில் கிரமமான முறையில் நடைபெற்ற ஐனாதிபதி தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பின் இரண்டாம் கட்டத்தின் 2ம் நாள் இன்று மாலை நிறைவடைந்தது. கடந்த ஒக்டோபர் 31ஆம் திகதியும், நவம்பர் 01ஆம் திகதியும் முதல்கட்ட அஞ்சல் மூல வாக்களிப்பு நடைபெற்றது. அதேபோன்று நவம்பர் 04ஆம், 05ஆம் திகதி இரண்டாம் கட்ட அஞ்சல் வாக்களிப்பு நடைபெற்றது. இந்த இரண்டு தினங்களும் வாக்களிக்க தவறிய அரச உத்தியோகத்தர்கள் எதிர்வரும் 07ஆம் திகதி மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் அலுவலகத்தில் நேரடியாக சென்று தங்கள் அஞ்சல் மூல வாக்களிப்பை செலுத்தமுடியும் என தெரிவத்தாட்சி அலுவலர் மாணிக்கம் உதயகுமார் தெரிவித்தார்.
இரண்டு தினங்களிலும் இரண்டாம் கட்ட அஞ்சல் மூல வாக்களிப்பிற்காக 326 வாக்காளர்கள் மாவட்ட செயலகத்திலும், 72 பேர் தேர்தல் அலுவலகத்திலும் 1524 பேர் பொலிஸ் திணைக்களத்திலும் அஞ்சல் மூல வாக்கினை செலுத்தினார்கள்.
இன்றைய இரண்டாம் கட்டத்தின் இரண்டாம் நாள் அஞ்சல் மூல வாக்களிப்பு நிலையங்களினை ஐரோப்பிய யூனியன் கண்காணிப்பாளர்களும், வெப்ரல் அமைப்பு மற்றும் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவரினால் அங்கிகாரம் வழங்கியுள்ள தேர்தல் கண்காணிப்பாளர்கள் கண்காணித்தனர் என தெரிவத்தாட்சி அலுவலர் மாணிக்கம் உதயகுமார் தெரிவித்தார்.
11/05/2019 09:03:00 PM
மட்டக்களப்பு மாவட்டத்தின் இரண்டாம் கட்ட தபால் மூல வாக்களிப்பு நிறைவு
Subscribe to:
Post Comments (Atom)



No comments: