News Just In

11/12/2019 04:19:00 PM

திருகோணமலை துறைமுகத்தின் ஆழ்கடல் பகுதியில் மீன் பிடிக்கச் சென்றவர் உயிரிழப்பு!

திருகோணமலை துறைமுகத்தில்  மீன்பிடிப்பதற்காக சென்ற மூன்று நபர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக துறைமுகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கந்தளாய் கொமுனுபுர அக்போபுர பிரதேசத்தை சேர்ந்த லொக்கு பதுகே கீத்சிறி (48 வயது) நபரே இவ்வாறு மரணமடைந்துள்ளார்.

குறித்த நபர் மீன்பிடிக்க ஆழ்கடலுக்கு சென்று கரைக்கு திரும்புகையில் மரணம் நிகழ்ந்துள்ளது என ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதுடன் மாரடைப்பினால் இந்த மரணம்  நிகழ்ந்திருக்கலாம் என சந்தேகிப்பதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவரின் சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன்  மேலதிக விசாரணைகளை துறைமுகப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments: