News Just In

11/12/2019 06:38:00 PM

மட்டு செல்வநாயகம் வீதி சித்தி விநாயகர் ஆலயத்தில் 1008 சங்காபிஷேகம்

மட்டக்களப்பு செல்வநாயகம் வீதியில் அமைந்துள்ள சித்தி விநாயகர் ஆலயத்தின் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு 1008 சங்காபிஷேகம் இன்று செவ்வாய்க்கிழமை (12.11.2019) நடைபெற்றது.

சுவாமி விக்னேஸ்வரர் குருக்கள் தலைமையில் ஸ்ரீ விக்னேஷ்வர பூஜை, கோ பூஜை மற்றும் கணபதி ஹோமம் ஆகியன நடைபெற்றதைத் தொடர்ந்து 1008 சங்காபிஷேகம் நடத்தப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது.

ஆலயத்துக்கு வருகை தந்த பக்தர்கள் பூஜையில் கலந்து கொண்டு விநாயகரை தரிசனம் செய்தனர். 1008 சங்காபிஷேக நிகழ்வில் உலக புகழ் நாதஸ்வர வித்வான் பால முருகன் அவர்களின் நாதஸ்வர இசை கச்சேரியும் இடம்பெற்றது.

சங்காபிஷேக நிகழ்வில் கலந்து கொண்ட அடியார்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments: