2019 ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற கல்வி பொது தராதர உயர்தர பரீட்சையின் பெறுபேறுகள் டிசம்பர் மாத இறுதிக்குள் வெளியிடப்படுமென பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்தார்.
வெளியிடப்படவுள்ள பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் அகில இலங்கை ரீதியாக முதலாம், இரண்டாம், மூன்றாம் இடங்களை பெற்ற மாணவர்களின் விபரங்கள் வெளியிடப்படமாட்டாதெனவும், தரம் ஐந்து புலமை பரீட்சையின் போது கடைப்பிடிக்கப்பட்ட நடைமுறையே பின்பற்றப்படும் எனவும்அவர் தெரிவித்தார்.
2018 ஆம் ஆண்டில் நடைபெற்ற க.பொ.த உயர்தர பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களுக்கான பல்கலைக்கழக அனுமதி தொடர்பான விபரங்களை வெளியிடும் நடவடிக்கைகளை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மேற்கொண்டு வருகின்றது.
அடுத்த மாத முற்பகுதியில் பல்கலைக்கழகத்திற்கு அனுமதிக்கப்படும் மாணவர்களின் விபரங்கள் அறிவிக்கப்படுமென பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.
11/12/2019 06:50:00 PM
க.பொ.த உயர்தர பரீட்சைப் பெறுபேறுகள் வெளியிடப்படவுள்ளன
Subscribe to:
Post Comments (Atom)
No comments: