டிசம்பர் மாதம் நேபாளத்தில் நடைபெறவுள்ள 13ஆவது தெற்காசிய விளையாட்டு விழாவின் மகளிர் கால்பந்தாட்டப் போட்டியில் இலங்கை அணியில் வட மாகாணத்தைச் சேர்ந்த பாஸ்கரன் ஷானு, மலையகத்தின் செல்வராஜ் யுவராணி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
2013, 2014 ஆகிய ஆண்டுகளில் 14 வயதுக்குட்பட்ட இலங்கை அணியில் இடம்பிடித்த பாஸ்கரன் ஷானு வட மாகாணத்திலிருந்து இலங்கை கனிஷ்ட அணிக்கு தெரிவான முதலாவது வீராங்கணை என்ற பெருமையைப் பெற்றார். 5 வருடங்கள் கழித்து நடத்தப்பட்ட தேர்வின் மூலம் தேசிய அணியில் ஷானு இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார்.
பதுளை மாவட்டம், ஹாலி – எல தமிழ் வித்தியாலயத்தின் முன்னாள் வீராங்கணையான செல்வராஜ் யுவராணி கடந்த இரண்டு வருடங்களாக தேசிய அணியில் விளையாடி வருகின்றார்.
தெற்காசிய மகளிர் கால்பந்தாட்டப் போட்டிக்கு தெரிவாகியுள்ள 20 வீராங்கணைகள் இந்தோனேசியாவில் நடைபெறவுள்ள பயிற்சிப் போட்டிகளில் விளையாடுவதற்காக புறப்பட்டுச் சென்றுள்ளனர்.
No comments: