திருகோணமலை மாவட்டத்தில் ஜனாதிபதி தேர்தல் கடமைகளில் பணியாற்றவுள்ள சிரேஸ்ட தலைமை தாங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிப்பட்டறை மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் திருகோணமலை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபரும் உதவித் தெரிவத்தாட்சி அலுவலருமான கே.அருந்தவராஜா தலைமையில் நடைபெற்றது.
தேர்தல் காலங்களில் உத்தியோகத்தர்கள் கடைப்பிடிக்க வேண்டிய சட்டதிட்டங்கள் தொடர்பாகவும், நடைமுறைகள் தொடர்பாகவும் இதன்போது விளக்கங்கள் வழங்கப்பட்டன.
தேர்தல் காலச் செயற்பாடுகள் பற்றி கிழக்கு மாகாண பிரதித் தேர்தல்கள் ஆணையாளர் கே.சுதாகரன் விளக்கங்களை வழங்கினர்.
திருகோணமலை மாவட்டத்தில் மொத்தமாக 307 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன. இதில் தொகுதி ரீதியாக,
சேருவில: 94
திருகோணமலை: 104
மூதூர் தொகுதி: 109
மொத்தமாக 30 வாக்கெண்ணும் நிலையங்கள் செயற்படவுள்ளதுடன் அவற்றுள் தபால் மூல வாக்குகளை எண்ணுவதற்காக 09 நிலையங்கள் செயற்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments: