News Just In

11/13/2019 08:10:00 AM

ஜனாதிபதி தொடர்பாக சமூக வலைத்தளங்களில் வெளியான செய்திகள் போலியானவை

தனது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் தனக்கு நெருக்கமான சிலருடன் ஜனாதிபதி கலந்துரையாடல் நடத்தியதாக சமூக ஊடகங்களில் வெளியிடப்படும் செய்தியில் எவ்வித உண்மைகளும் இல்லை என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு:

ஊடக அறிவித்தல்
ஜனாதிபதி அவர்கள் தனது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் தனக்கு நெருக்கமான சிலருடன் அண்மையில் விசேட கலந்துரையாடலொன்றை மேற்கொண்டதாகவும், கடந்த ஐந்து வருட காலப்பகுதியில் மேற்கொண்ட சில தீர்மானங்கள் தொடர்பாக ஜனாதிபதி அவர்கள் இதன்போது கவலை தெரிவித்ததாகவும், நவம்பர் மாதம் 18ஆம் திகதி இந்த அனைத்து விடயங்களையும் மக்களுக்கு தெரிவிக்கவுள்ளதாகவும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டிருப்பதாக சமூக ஊடகங்களில் வெளியிடப்படும் செய்தியில் எவ்வித உண்மைகளும் இல்லை.

மேலும் எந்தவொரு தரப்பினரும் தேர்தலின் இறுதி சில நாட்களுக்குள் ஜனாதிபதி அவர்கள் சம்பந்தமாக இத்தகைய போலியான செய்திகளை உருவாக்கி பிரச்சாரம் செய்வது குறித்து ஜனாதிபதி அவர்கள் கவலை வெளியிட்டுள்ளார்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு
2019.11.12

No comments: