News Just In

11/24/2019 05:03:00 PM

றுவன்வெலி மஹாஷாயவில் சூடாமாணிக்கத்தை பிரதிஷ்டை செய்யும் நிகழ்வு

அனுராதபுரம் - றுவன்வெலி மஹாஷாயவில் சூடாமாணிக்கத்தை பிரதிஷ்டை செய்தல் மற்றும் தங்க வர்ணம் பூசும் புண்ணிய நிகழ்வு நாளையும், நாளை மறுதினமும் இடம்பெறவுள்ளன.

இதற்கான சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக நுவர கலாவிய தலைமை சங்க நாயக்கர் றுவன்வெல் ஷைதாராமாதிகாரி சங்கைக்குரிய பல்லேகம ஹேமரதன தேரர் தெரிவித்துள்ளார்.

18 ஆம் நூற்றாண்டின் மத்திய காலப்பகுதியில் முதன் முறையாக மறுசீரமைக்கப்பட்ட றுவன்வெலி மஹாஷாயவில் சூடாமாணிக்கத்தை பிரதிஷ்டை செய்யப்பட்ட நிகழ்வு 1940 ஆம் ஆண்டு பொசொன் நோன்மதி தினத்தில் இடம்பெற்றது.

80 வருடங்களின் பின்னர், மேற்கொள்ளப்பட்ட ஆய்வு மற்றும் கண்காணிப்புக்கு அமைய இந்த சூடாமாணிக்கம் பல்வேறு காலநிலை மாற்றத்திற்கு உள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, றுவன்வெலி மஹாஷாயவில் சூடாமாணிக்கத்தை பிரதிஷ்டை செய்வதற்குத் தீர்மானிக்கப்பட்டது. இதேபோன்று தங்கவேலியிலும் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

இது அவுஸ்திரேலியாவில் நிர்மாணிக்கப்பட்டது. சூடாமாணிக்கம் இயற்கையில் நீலும் மற்றும் சிகப்பு நிறத்தினால் 5320 மாணிக்கக்கற்கள் பயன்படுத்தப்பட்டு தயாரிக்கப்பட்டுள்ளன.

இது மொத்தமாக 60 கிலோ கிராம் எடையைக் கொண்டதாகும். தங்கமூலாம் பூசப்பட்ட பகுதி 3 அடி உயரத்தைக் கொண்டது. கடந்த வெள்ளிக்கிழமை இரவு றுவன்வெலி மஹாசாஷ வளவில் வைக்கப்பட்ட சூடாமாணிக்கத்தை பொதுமக்கள் நாளை பிற்பகல் 12.00 மணி வரை பார்வையிடலாம்.

No comments: