News Just In

11/24/2019 04:38:00 PM

யாழில் புலிகளின் மீள் வருகைக்கு பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் வீட்டில் ஆயுதக் கிடங்கைத் தேடி அகழ்வுப்பணி

புலிகளின் மீள் வருகைக்கு பயன்படுத்தப்பட்டதாக பாதுகாப்புத் தரப்புகளால் தெரிவிக்கப்பட்ட வீட்டின் வளாகத்தில் ஆயுதக் கிடங்கு உள்ளமை தொடர்பில் அகழ்வுப் பணிகளை முன்னெடுக்க யாழ். நீதிவான் நீதிமன்றில் அனுமதி வழங்கப்பட்டமையை அடுத்து அகழ்வு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அரியாலை தபால் கட்டைச் சந்திக்கு அண்மையாக உள்ள குறித்த வீட்டில் இராணுவ முகாம் அமைந்திருந்தது. வடமாகாண சபைத் தேர்தலை அடுத்து அங்கிருந்த இராணுவ முகாம் அகற்றப்பட்டது.

தெய்வீகன், அப்பன் மற்றும் கோபி ஆகிய போராளிகள் மூவரும் இந்த வீட்டிலிருந்தே தமிழீழ விடுதலைப் புலிகளின் மீள் உருவாக்கத்துக்கான நடவடிக்கைகளை முன்னெடுத்தனர் என்பதற்காக 2015ஆம் ஆண்டு ஏப்ரல் 12ஆம் திகதி வவுனியாவில் படுகொலை செய்யப்பட்டனர்.

அதன்பின்னர் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரே குறித்த வீட்டை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments: