News Just In

11/04/2026 11:38:00 AM

மக்களுக்கு அடுத்த பேரிடி - மின்சாரக் கட்டணம் உயரப்போகிறதா? வெளியான முக்கிய அறிவிப்பு!

மக்களுக்கு அடுத்த பேரிடி - மின்சாரக் கட்டணம் உயரப்போகிறதா? வெளியான முக்கிய அறிவிப்பு!




2026ஆம் ஆண்டின் நான்காம் காலாண்டிற்கான மின்சாரக் கட்டணத்தை 2.88 சதவீதத்தால் அதிகரிக்குமாறு நஷனல் சிஸ்டம் ஒப்பரேட்டர்ஸ் (NSO) யோசனை முன்வைத்துள்ளது.

எனினும், குறித்த காலப்பகுதியில் 1.46 சதவீத கட்டண அதிகரிப்பை மாத்திரம் அமுல்படுத்துவதற்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது.


இந்நிலையில், மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பான இறுதித் தீர்மானம் நாளை (05) நடைபெறவுள்ள பொதுமக்கள் கருத்துக்கேட்புக் கூட்டத்தின் பின்னரே அறிவிக்கப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மேலும், குறித்த கருத்துக்கேட்புக் கூட்டத்தில் பங்கேற்க விரும்புவோர் 0770399119 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொண்டு தங்களைப் பதிவு செய்துகொள்ளுமாறு ஆணைக்குழு கோரியுள்ளது.

No comments: