News Just In

11/03/2026 08:21:00 AM

பல்லவராய மன்னன் உருவச்சிலைக்கு சிறீதரன் மாலை அணிவித்து மரியாதை

பல்லவராய மன்னன் உருவச்சிலைக்கு சிறீதரன் மாலை அணிவித்து மரியாதை




கி.பி. 12ஆம் நூற்றாண்டில் வன்னிப் பெருநிலப்பரப்பில் சுயாட்சியுடைய நகரங்களையும் இராணுவக் கட்டமைப்புகளையும் நிறுவி ஆட்சி செய்த சிற்றரசர்களுள் வீரத்தின் அடையாளமாக விளங்கும் பல்லவராய மன்னனின் உருவச்சிலைக்கு, நேற்று திங்கட்கிழமை இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதன்போது, ஸ்ரீலங்கா வான் படையின் குண்டுவீச்சுக்கு இலக்காகி வீரச்சாவதைத் தழுவிக்கொண்ட தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வன் உட்பட 7 மாவீரர்களின் 19ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அகவணக்கம் செலுத்தி நினைவுகூரப்பட்டது.

பூநகரி பிரதேச சபையின் பல்லவராயன்கட்டு வட்டார உறுப்பினர் பிள்ளையினார் இராசலிங்கம் தலைமையில் பல்லவராய மன்னனின் உருவச்சிலை அமைந்துள்ள பகுதியில் நடைபெற்ற இந்த நிகழ்வில்,

நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், பூநகரி பிரதேச சபையின் தவிசாளர் சிவகுமாரன் சிறீரஞ்சன், பூநகரி பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் தலைவர் சிங்ககுமார் செல்வகுமார், பூநகரி பிரதேச சபையின் உறுப்பினர்களான சுப்பிரமணியம் சந்திரபோஸ் (ஜெயபுரம் வட்டாரம்), திருமதி தாரிணி ஜனார்த்தனன் (பொன்னாவெளி வட்டாரம்),

பூநகரி பிரதேச சபையின் மேனாள் உறுப்பினர் கேதீஸ்வரன், கட்சியின் பூநகரி பிரதேச வாலிப முன்னணியினர், கட்சியின் செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

No comments: