News Just In

11/16/2026 09:20:00 AM

மட்டக்களப்பில் அதிர்ச்சிச் சம்பவம் – இராணுவ வாகனத்துடன் மோதி ஒருவர் பலி

மட்டக்களப்பில் அதிர்ச்சிச் சம்பவம் – இராணுவ வாகனத்துடன் மோதி ஒருவர் பலி




மட்டக்களப்பு, கிரான் – தொப்பிவிலை வீதியில் இராணுவ ரக் வண்டியும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதில், மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து நேற்று  (15) ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்றுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்விபத்தில் திகிலிவெட்டை, நாகதம்பிரான் வீதியைச் சேர்ந்த 52 வயதுடைய செல்லத்துரை சுரேஸ்குமார் என்பவரே உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் கிரானிலிருந்து தொப்பிவிலை நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்தபோது, பிரதேச செயலகத்திற்கு அருகிலுள்ள வீதி வளைவை அண்மித்த பகுதியில்,

எதிர்த்திசையில் தொப்பிவிலையிலிருந்து கிரான் நோக்கிப் பயணித்த இராணுவ ரக் வண்டியுடன் நேருக்கு நேர் மோதியுள்ளார்.

இதன்போது பலத்த காயமடைந்த மோட்டார் சைக்கிள் சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், விபத்துடன் தொடர்புடைய இராணுவ ரக் வண்டியின் சாரதியையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்

No comments: