இலங்கையிலிருந்து விலகிச் சென்ற புயல்
இலங்கைக்கு வடகிழக்கு திசையில், வங்காள விரிகுடா கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் ‘ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக’ (Deep Depression) வலுப்பெற்றுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நேற்று இரவு நிலவரப்படி, இத்தொகுதியானது திருகோணமலையில் இருந்து சுமார் 640 கி.மீ தூரத்தில், வடகிழக்கு திசையில் நிலைபெற்றிருந்தது.
மேலும் இத்தொகுதியானது இலங்கையிலிருந்து விலகிச் சென்று, இன்று (16) மாலை வேளையில் தெற்கு மற்றும் அதனை ஒட்டிய மேற்கு மத்திய வங்காள விரிகுடா கடல் பகுதியில் ‘புயலாகவும்’ , நவம்பர் 17 ஆம் திகதியளவில் மேற்கு மத்திய வங்காள விரிகுடா கடல் பகுதியில் ‘தீவிர புயலாகவும்’ வலுப்பெறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எவ்வாறாயினும், இலங்கையில் தற்போது நிலவும் மழை நிலைமையில் இன்று (16) முதல் குறைவு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது
11/16/2026 09:29:00 AM
இலங்கையிலிருந்து விலகிச் சென்ற புயல்
Subscribe to:
Post Comments (Atom)

No comments: