முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளுக்காகத் தொடர்ச்சியாகக் குரல் கொடுத்து வந்தவருமான வல்வெட்டித்துறை நகர பிதா எம்.கே.சிவாஜிலிங்கத்தின் மறைவுச் செய்தி அறிந்து மிகுந்த கவலையடைந்தேன் என முன்னாள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
2002ஆம் ஆண்டு காலப்பகுதியில் நாடாளுமன்றத்தில் என்னுடன் இணைந்து செயற்பட்டவர்களில் சிவாஜிலிங்கமும் ஒருவராவார். அக்காலப்பகுதியில் நிலவிய சமாதானப் பேச்சுவார்த்தைகள் மற்றும் யுத்த நிறுத்தச் சூழலில் தமிழ் – முஸ்லிம் மக்களுக்கிடையிலான நல்லுறவு மற்றும் ஒற்றுமையை வலியுறுத்திய அரசியல் தலைவராக அவர் விளங்கினார்.
குறிப்பாக, கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் மக்கள் இலக்குவைக்கப்பட்டு பல்வேறு வன்முறைச் சம்பவங்களால் பாதிக்கப்பட்ட சந்தர்ப்பங்களில், அவை தொடர்பில் கவலையடைந்து தனது கரிசனையை வெளிப்படுத்தியவர்.
இனப்பிரச்சினைக்கான தீர்வில் முஸ்லிம் மக்களுக்கும் சமமான பங்களிப்பு வழங்கப்பட வேண்டும் என்பதிலும், அனைத்து சமூகங்களினதும் உரிமைகளையும் உள்ளடக்கிய நிரந்தரமான அரசியல் தீர்வொன்று எட்டப்பட வேண்டும் என்பதிலும் அவர் அக்கறையுடன் செயற்பட்டார்.
அதேவேளை, தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் மற்றும் அரசியல் அபிலாஷைகள் தொடர்பில் உறுதியான கொள்கைகளைக் கொண்டிருந்த அவர், தனது அரசியல் நிலைப்பாடுகளில் தொடர்ச்சியாகக் குரல் கொடுத்து வந்தவர்.
அவரது மறைவு தமிழ் அரசியல் பரப்பிற்கும், இனங்களுக்கிடையிலான நல்லுறவை வலியுறுத்திய அரசியல் பயணத்திற்கும் பேரிழப்பாகும்.
அன்னாரின் மறைவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் அரசியல் உறவுகள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களையும் இரங்கலையும் தெரிவித்துக்கொள்கின்றேன் என எச்.எம்.எம். ஹரீஸ் தெரிவித்துள்ளார்.
நூருல் ஹுதா உமர்

No comments: