News Just In

11/03/2026 10:27:00 AM

கடும் காற்று, இடியுடன் கூடிய மழை, கடல் கொந்தளிப்பு

கடும் காற்று, இடியுடன் கூடிய மழை, கடல் கொந்தளிப்பு




வங்காள விரிகுடாவின் மத்திய மற்றும் தென்மேற்குப் பகுதியில் நிலை கொண்டிருந்த ‘முரசு’ தீவிர சூறாவளியாக வலுவடைந்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நேற்றைய நிலவரப்படி, இந்த புயல் வடக்கு நெட்டாங்கு 13.90N மற்றும் கிழக்கு அகலாங்கு 81.80E அருகில் காணப்பட்டதாக அந்த திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. இந்த தீவிரப் புயலானது வடமேற்குத் திசையை நோக்கி நகர்ந்து நாளை அதிகாலைக்கு இடைப்பட்ட காலத்தில் தெற்கு ஆந்திரப் பிரதேசக் கரையை ஊடுருவக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள கடல் பகுதிகளில் காற்றின் வேகம் இடைக்கிடையே மணித்தியாலத்திற்கு 70 முதல் 80 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என்பதோடு, பலத்த இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

அதன் காரணமாக அப்பகுதிகளில் கடல் கொந்தளிப்பாகக் காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலைமையைக் கருத்திற் கொண்டு வளிமண்டலவியல் திணைக்களம் அவசர அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

10N-17N மற்றும் 80E-90E ஆகிய எல்லைகளுக்குட்பட்ட ஆழ்கடற்பகுதிகளுக்கு மறு அறிவித்தல் வரை தொழிலுக்கு செல்ல வேண்டாம் என கடற்படை மற்றும் கடற்றொழிலாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.






No comments: