News Just In

10/06/2026 12:15:00 PM

ஷிரந்தியின் முன்பிணை மனு விசாரணை: FCID பொறுப்பதிகாரிக்கு ஒக். 12 மாளிகாகந்த நீதிமன்றிற்கு அழைப்பு

ஷிரந்தியின் முன்பிணை மனு விசாரணை: FCID பொறுப்பதிகாரிக்கு ஒக். 12 மாளிகாகந்த நீதிமன்றிற்கு அழைப்பு!




ஷிரந்தி ராஜபகஷ்வின் முன்பிணை விசாரணை தொடர்பில் பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரிக்கு ஒக்டோபர் 12ஆம் திகதி மாளிகாகந்த நீதிமன்றில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

‘சிரிலிய சவிய’ நிதியக் கணக்கு தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளுக்கு அமைவாகத் தன்னைக் கைது செய்வதைத் தடுக்கும் உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு கோரி, முன்னாள் முதல் பெண்மணி ஷிரந்தி ராஜபக்ஷ தாக்கல் செய்த முன்பிணை மனு இன்று (06) மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது, குறித்த மனு தொடர்பான விசாரணைகளுக்காக எதிர்வரும் ஒக்டோபர் 12 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு பொலிஸ் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவின் (FCID) பொறுப்பதிகாரிக்கு நீதிமன்றம் அழைப்பாணை பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது

No comments: