காவன்திஸ்ஸ யானைக்குச் சிகிச்சையளிக்க வந்த நிக்கவெரட்டிய கால்நடை மருத்துவ அலுவலகத்தில் பணியாற்றிய மருத்துவர் இஸுரு ஹேவாஹெட்டிகே, தனது பதவி விலகல் கடிதத்தைச் சமர்ப்பித்துள்ளதாக வனவிலங்கு மற்றும் மிருகக்காட்சிசாலை கால்நடை மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் வைத்தியர் நிஹால் புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.
காவன்திஸ்ஸ யானைக்குச் சரியான முறையில் சிகிச்சை அளிக்கவில்லை, அதிகளவு மருந்துகளை வழங்கினார் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் மருத்துவர் மீது முன்வைக்கப்பட்டிருந்தன.
காவன்திஸ்ஸ யானைக்குச் சரியான முறையில் சிகிச்சை அளிக்கவில்லை, அதிகளவு மருந்துகளை வழங்கினார் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் மருத்துவர் மீது முன்வைக்கப்பட்டிருந்தன.
இந்தக் குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, சமூகத்திலும் சமூக வலைத்தளங்களிலும் அவருக்கு எதிராகக் கடுமையான எதிர்ப்புகள் எழுந்திருந்தன.மேலும், முன்னதாக நோய்வாய்ப்பட்டு உயிரிழந்த தேக்க ராஜா மற்றும் பாத்திய ஆகிய யானைகளுக்கும் இதே மருத்துவரே சிகிச்சை அளித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.அந்த யானைகளும் கவலைக்கிடமான நிலையில் உயிரிழந்த சம்பவங்கள் தொடர்பாகவும் மருத்துவர் மீது சமூகத்தில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

No comments: