மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட தேத்தாத்தீவு பகுதியில், குடியிருப்புக்குள் இரவு வேளையில் புகுந்த காட்டு யானையால் மக்களின் வீடுகள் மற்றும் விவசாய நிலங்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
குறித்த யானை, வீடுகளைச் சுற்றியுள்ள வேலிகளைச் சேதப்படுத்தியதுடன், தென்னை மற்றும் மூங்கில் உள்ளிட்ட பயன்தரும் மரங்களையும் முறித்துச் சேதப்படுத்தியுள்ளது. அத்துடன், மரவள்ளித் தோட்டம் உள்ளிட்ட விவசாய நிலங்களையும் அழித்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த மூன்று நாட்களாக தேத்தாத்தீவு பகுதியில் சஞ்சரித்து வரும் இந்தக் காட்டு யானை, தினமும் இரவு 9 மணியளவில் குடியிருப்புப் பகுதிக்குள் நுழைந்து, அதிகாலை வரை அங்கேயே தங்கியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

No comments: