(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)
மட்டக்களப்பு பட்டிருப்புக் கல்வி வலயத்தில் அறிவு, திறன், மனப்பாங்கு உள்ளிட்ட இன்னும் பல ஆளுமை விடயங்களில் சுய பாதுகாப்பு கொண்ட மாணவர் சமூகத்தை உருவாக்கும் திட்டம் அமுல்படுத்தப்படுவதாக மண்முனை தென்எருவில் பற்றுப் பிரதேச செயலாளர் யூ. உதயசிறீதர் தெரிவித்தார்.
இதன் பிரகாரம் மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகம், பட்டிருப்பு வலயக்கல்வி அலுவலகத்துடன் இணைந்து மண்முனை தென் எருவில்பற்று கோட்டத்திற்குட்பட்ட பாடசாலைகளில்
தரம் 10ல் கல்வி பயிலும் சகல மாணவர்களுக்கும் அவர்களது அறிவு, திறன், மனப்பாங்கு விருத்தியை மேம்படுத்தும் நோக்கில் பரீட்சை இடம்பெற்றது.
இலங்கையில் சிறுவர் பாதுகாப்பு சட்ட ஏற்பாடுகள், சிறுவர் பாதுகாப்பு பொறிமுறைகள், சிறுவர்கள் தொடர்பான சமகால போக்குகள், சிறுவர்களுடைய கடமைகளும் பொறுப்புக்களும், குழந்தை விருத்திப் படிநிலைகள் உட்பட சிறுவர் பாதுகாப்புடன் தொடர்புடைய ஏனைய விடயங்களையும் கருப்பொருளாகக் கொண்டு மேற்படி பரீட்சைக்கு வினாத்தாள் தயாரிக்கப்பட்டு மாணவர்கள் தேர்வெழுத ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தற்காலத்தில் சிறுவர்கள் மத்தியில் தமது பாதுகாப்பு பொறிமுறைகள், ஆபத்தான சூழலுக்கு முகம் கொடுக்க கூடிய வேளையில் பாதுகாப்புப் பெறும் படிமுறைகள், சிறுவர்களுக்குரிய கடமைகள், பொறுப்புகள், கட்டாயக் கல்வியின் அவசியம் முதலான விடயங்களை அடிப்படையாகக் கொண்டு, கட்டிளமைப்பருவ சிறுவர்களுக்கு அறிவூட்டலை வழங்கி அவர்களை தற்கால சூழலுக்கு முகங்கொடுக்ககூடிய வகையில் தயார்படுத்த வேண்டிய தேவைப்பாடு உணரப்பட்டுள்ளதால் இத்திட்டத்தை அமுல்படுத்தவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

No comments: