News Just In

10/07/2026 03:03:00 PM

அனோஜனுக்கு ஏற்பட்டது நகக் கீறல் காயங்களே அமைச்சர்..! சாணக்கியன் இராசமாணிக்கம் அவர்களின் அவசரக் கேள்விகள்.

அனோஜனுக்கு ஏற்பட்டது  நகக் கீறல் காயங்களே அமைச்சர்..!சாணக்கியன் இராசமாணிக்கம் அவர்களின்  அவசரக் கேள்விகள்.



சவுதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்கொள்ளும் சிவராசா அனோஜன் –நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் 07.10.2026 சாணக்கியன் இராசமாணிக்கம்
அவசரக் கேள்விகள்.

மேன்முறையீட்டு ஆவணங்கள், சட்ட நடவடிக்கைகள், சிறைச்சாலை தாக்குதல்தொடர்பான முரண்பட்ட தகவல்கள் மற்றும் நாடாளுமன்றக் குழுவின் பயணம்குறித்து அரசாங்கத்திடம் விளக்கம் கோரல்.

சவுதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்கொண்டு வரும் இலங்கைப் பிரஜையானசிவராசா அனோஜன் தொடர்பான சட்ட மற்றும் இராஜதந்திர நடவடிக்கைகள் குறித்துநாடாளுமன்றத்தில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன்இராசமாணிக்கம் பல்வேறு அவசரக் கேள்விகளை முன்வைத்துள்ளார். சிவராசாஅனோஜனின் வழக்கு தொடர்பாக ஏற்கனவே நாடாளுமன்றத்தில் கேள்விகள்எழுப்பப்பட்டிருந்த நிலையில், அதனைத் தொடர்ந்து சட்டத்தரணிகள் குழுவொன்று
சவுதி அரேபியாவுக்குச் சென்றுள்ளமை, சவுதி அரசுத் தரப்பினால்
மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளமை, சிவராசா அனோஜன் சிறைச்சாலையில்தாக்கப்பட்டதாக வெளியாகியுள்ள தகவல்கள் மற்றும் அவருக்கான நாடாளுமன்றபிரதிநிதிகள் குழுவொன்றை சவுதி அரேபியாவுக்கு அனுப்புவதற்கான முன்மொழிவுஉள்ளிட்ட புதிய முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ள நிலையில், சாணக்கியன்இராசமாணிக்கம் மீண்டும் இந்த விவகாரத்தை நாடாளுமன்றத்தில்எழுப்பியுள்ளார். சிவராசா அனோஜனின் உயிர் பாதுகாப்பு, தற்போதைய உடல்நிலை,அவருக்கு எதிரான வழக்கின் சட்ட நிலை, மேல்முறையீட்டு நடவடிக்கைகள்மற்றும் இலங்கை அரசாங்கம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்துதெளிவான பதில்கள் வழங்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

சிறைச்சாலையில் தாக்குதல் இடம்பெற்றதா? சாணக்கியன் இராசமாணிக்கம்
நாடாளுமன்றத்தில் முன்வைத்த கேள்விகளில் முக்கியமானதாக சிவராசா அனோஜன்சிறைச்சாலையில் தாக்கப்பட்டதாக வெளியான தகவல் அமைந்திருந்தது. சிவராசாஅனோஜன் முன்னர் தடுத்து வைக்கப்பட்டிருந்த சிறைச்சாலையிலிருந்து வேறுசிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட பின்னர், அங்கு மரண தண்டனை விதிக்கப்பட்டகைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள பகுதியில் மற்றொரு கைதியால் அவர்தாக்கப்பட்டதாக அவரது குடும்பத்தினரிடமிருந்து தகவல் கிடைத்துள்ளதாகசாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்தார்.

குடும்பத்தினருக்கு கிடைத்த தகவலின்படி, சிவராசா அனோஜனின் தலையில்
கத்தியால் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், அவரது உயிருக்கு அச்சுறுத்தல்
ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். இதன்
காரணமாக சிவராசா அனோஜனின் தற்போதைய பாதுகாப்பு நிலைமை தொடர்பில்அரசாங்கம் உறுதியான தகவல்களை வழங்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

சவுதி அரசுத் தரப்பின் தகவல் வேறுபட்டது எவ்வாறாயினும், இலங்கை
வெளிவிவகார அமைச்சர் நாடாளுமன்றத்தில் வழங்கிய விளக்கத்தில், சவுதி
சிறைச்சாலை அதிகாரிகளிடமிருந்து கிடைத்த தகவல் இதற்கு மாறுபட்டதாக
இருப்பதாக தெரிவித்தார். சவுதி சிறைச்சாலை அதிகாரிகள் வழங்கிய
தகவலின்படி, சிவராசா அனோஜனுக்கும் அவருடன் ஒரே சிறைக்கூடத்தில் தடுத்துவைக்கப்பட்டிருந்த மற்றொரு கைதிக்கும் இடையில் முதலில் வாய்த்தகராறுஏற்பட்டதாகவும், பின்னர் அது மோதலாக மாறியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.அந்தச் சம்பவத்தின் போது சிவராசா அனோஜனின் முகம் மற்றும் உடலில் கீறல்காயங்கள் ஏற்பட்டதாகவும், அந்தக் காயங்கள் மற்றைய கைதியின் விரல்நகங்களால் ஏற்பட்டவை என சிறைச்சாலை வைத்திய அதிகாரி தெரிவித்ததாகவும்அமைச்சர் கூறினார்.
மேலும், கத்தி அல்லது வேறு எந்த கூர்மையான ஆயுதமும் பயன்படுத்தப்படவில்லைஎனவும் சவுதி சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக அமைச்சர்நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டார். அதேவேளை, சிவராசா அனோஜனின் உயிருக்குதற்போது அடையாளம் காணப்பட்ட எந்தவொரு அச்சுறுத்தலும் இல்லை எனவும், அவரதுபாதுகாப்பை உறுதிப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும்
சவுதி சிறைச்சாலை அதிகாரிகள் இலங்கை தூதரக அதிகாரிகளிடம்
உறுதியளித்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். இதனையடுத்து சிவராசா
அனோஜன் வேறு சிறைக்கூடத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் அவர்
தெரிவித்தார்.

தூதரக அதிகாரிகளுக்கு சிவராசா அனோஜனை நேரடியாக சந்திக்க அனுமதி இல்லைசிவராசா அனோஜனின் நிலைமையை நேரடியாக உறுதிப்படுத்துவதற்காக இலங்கைத்தூதரக அதிகாரிகள் சவுதி அரேபியாவில் உள்ள தம்மாம் சிறைச்சாலைக்கு இரண்டுசந்தர்ப்பங்களில் சென்றுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். குறிப்பாக, 2026ஒக்டோபர் 6ஆம் திகதியும் இலங்கைத் தூதரக அதிகாரிகள் சிறைச்சாலைக்குச்சென்று சிறைச்சாலை அதிகாரிகளை சந்தித்ததாக அவர் கூறினார். அந்தசந்திப்பில் சிறைச்சாலை பொறுப்பதிகாரியும் கைதிகளின் சுகாதாரசேவைகளுக்குப் பொறுப்பான சிறைச்சாலை வைத்தியரும் கலந்துகொண்டதாகதெரிவிக்கப்பட்டது.

எனினும், இலங்கைத் தூதரக அதிகாரிகளுக்கு சிவராசா அனோஜனை நேரடியாகச்சந்தித்து அவரது உடல்நிலையைப் பார்வையிட அனுமதி வழங்கப்படவில்லை எனஅமைச்சர் தெரிவித்தார். இதனால், சிவராசா அனோஜனின் உடல்நிலை தொடர்பானதகவல்கள் சிறைச்சாலை வைத்தியர் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகள் வழங்கியதகவல்களின் அடிப்படையில் இலங்கை அரசாங்கத்துக்கு கிடைத்துள்ளதாக அமைச்சர்விளக்கமளித்தார்.

சவுதி அரசுத் தரப்பின் மேல்முறையீட்டு ஆவணம் நாடாளுமன்றத்தில்
சமர்ப்பிக்கப்படுமா? சிவராசா அனோஜனுக்கு எதிரான வழக்கில் சவுதி அரசுத்
தரப்பினால் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளதாக முன்னர் அமைச்சர்
நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்த நிலையில், அந்த மேல்முறையீட்டு
ஆவணத்தின் பிரதியை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க முடியுமா என சாணக்கியன்இராசமாணிக்கம் கேள்வி எழுப்பினார். அத்துடன், சவுதி அரசுத் தரப்பின்மேல்முறையீட்டு ஆவணம், முதன்மை நீதிமன்றத் தீர்ப்பு, சிவராசா அனோஜனின்மேல்முறையீடு, மரண தண்டனை விதிக்கப்பட்ட தீர்ப்பு, உச்சநீதிமன்றத்திற்கானமேல்முறையீட்டு ஆவணங்கள் உள்ளிட்ட அனைத்து தொடர்புடைய ஆவணங்களையும்நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர், தமக்குக் கிடைத்துள்ள சில தீர்ப்புகள்
மற்றும் சட்ட ஆவணங்களின் பிரதிகளை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கத் தயாராகஇருப்பதாகவும், சவுதி அரசுத் தரப்பின் மேல்முறையீட்டு பிரதியை இன்னும்முழுமையாகப் பெறவில்லை எனவும் தெரிவித்தார். அந்த ஆவணம் கிடைத்தவுடன்நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் எனவும் அவர் உறுதியளித்தார். சவுதிஅரசுத் தரப்பின் மேல்முறையீடு எப்போது செய்யப்பட்டது? சவுதி அரசுத்தரப்பின் மேல்முறையீடு தொடர்பாகவும் சாணக்கியன் இராசமாணிக்கம் கேள்விஎழுப்பினார். அதற்கு பதிலளித்த அமைச்சர், சிவராசா அனோஜனுக்கான இலங்கைதரப்பு மேல்முறையீட்டைத் தாக்கல் செய்வதற்கு முன்னதாகவே சவுதி அரசுத்தரப்பினால் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்ததாகத் தெரிவித்தார்.

அதன்படி, சவுதி தரப்பின் மேல்முறையீடு செப்டெம்பர் 23ஆம் திகதி தாக்கல்
செய்யப்பட்டதாகவும், இலங்கை தரப்பின் மேல்முறையீடு அதனைத் தொடர்ந்துதாக்கல் செய்யப்படவுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
உச்சநீதிமன்ற மேல்முறையீட்டுக்கான இறுதி நாள் ஒக்டோபர் 17 சிவராசா
அனோஜனுக்காக சவுதி அரேபியாவின் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும்நடவடிக்கை தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக வெளிவிவகார அமைச்சர்தெரிவித்தார். இலங்கை சட்ட நிபுணர்கள் குழுவொன்றின் உதவியுடனும் சவுதிசட்ட ஆலோசகர்களின் ஒத்துழைப்புடனும் இந்த மேல்முறையீட்டு நடவடிக்கைமேற்கொள்ளப்படுவதாக அவர் கூறினார். ஜனாதிபதி சட்டத்தரணி பைசல் முஸ்தபா,ஜனாதிபதி சட்டத்தரணி உபுல் குமரப்பெரும உள்ளிட்ட சட்ட நிபுணர்கள் சவுதிஅரேபியாவுக்குச் சென்றுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். உச்சநீதிமன்ற
மேல்முறையீட்டுக்கான இறுதி நாள் ஒக்டோபர் 17ஆம் திகதி எனவும், அதற்கு
முன்னதாக, பெரும்பாலும் ஒக்டோபர் 14ஆம் திகதிக்கு முன்னரே மேல்முறையீட்டைதாக்கல் செய்ய எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.சட்டத்தரணிகள் குழு சவுதி சட்ட நிறுவனத்துடன் மேற்கொள்ளும்கலந்துரையாடல்களின் பின்னர் இறுதி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர்தெரிவித்தார்.

சட்டத்தரணிகள் குழுவின் சவுதி பயணம் – தற்போதைய நிலை என்ன? சிவராசாஅனோஜனுக்கான சட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக இலங்கையிலிருந்து சட்டநிபுணர்கள் குழுவொன்று சவுதி அரேபியாவுக்குச் சென்றுள்ள நிலையில், அந்தக்குழுவின் சந்திப்புகள் மற்றும் தற்போதைய நிலை குறித்து சாணக்கியன்இராசமாணிக்கம் கேள்வி எழுப்பினார்.
சவுதி சட்ட ஆலோசகர்களுடன் இணைந்து இலங்கை சட்ட நிபுணர்கள் மேல்முறையீட்டுஆவணங்களைத் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.அத்துடன், வெளிவிவகார அமைச்சு, ரியாதில் உள்ள இலங்கைத் தூதரகம், இலங்கைவெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களம்ஆகியவை இந்த நடவடிக்கையில் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருவதாகவும்அமைச்சர் குறிப்பிட்டார்.

ஜனாதிபதியின் கருணை மனு தொடர்பான நிலைசிவராசா அனோஜனுக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனையை குறைப்பதற்கோ அல்லது
மன்னிப்பு வழங்குவதற்கோ ஜனாதிபதியின் தலையீடு தொடர்பான நிலை என்ன என்பதுகுறித்தும் சாணக்கியன் இராசமாணிக்கம் கேள்வி எழுப்பினார். ஜனாதிபதியுடன்சந்திப்பொன்றை ஏற்பாடு செய்து இந்த விவகாரம் தொடர்பில்கலந்துரையாடுவதற்கு தாம் முயற்சித்து வருவதாகவும், ஆனால் இதுவரை அதற்கானநேரம் கிடைக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார். ஜனாதிபதி தரப்பில்ஏற்கனவே ஏதேனும் கருணை மனு அல்லது மன்னிப்புக் கோரிக்கைமுன்வைக்கப்பட்டுள்ளதா அல்லது அது தொடர்பான நடவடிக்கை
மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்பதையும் அமைச்சர் தெளிவுபடுத்த வேண்டும் எனஅவர் கோரினார்.

நாடாளுமன்ற சிறப்பு பிரதிநிதிகள் குழு எப்போது சவுதி செல்லும்?
சிவராசா அனோஜன் விவகாரம் தொடர்பில் சவுதி அரேபியாவுக்கு நாடாளுமன்றசிறப்பு பிரதிநிதிகள் குழுவொன்றை அனுப்புவதற்கான முன்மொழிவு ஏற்கனவேமுன்வைக்கப்பட்டிருந்தது. அந்தக் குழு பிரதி சபாநாயகர் தலைமையில்செல்லவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், அந்தக் குழுஅமைக்கப்பட்டுள்ளதா, அதில் யார் யார் இடம்பெறவுள்ளனர், எப்போது சவுதிஅரேபியாவுக்குச் செல்லவுள்ளது, சவுதி அரசாங்கம் அந்தக் குழுவை வரவேற்கஇணக்கம் தெரிவித்துள்ளதா என்பன குறித்தும் சாணக்கியன் இராசமாணிக்கம்கேள்வி எழுப்பினார். அத்துடன், தாமும் இந்தக் குழுவில் இடம்பெற வேண்டும்என முன்மொழிந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இதற்கு பதிலளித்தஅமைச்சர், தற்போதைய நீதிமன்ற நடவடிக்கைகள் நிறைவடையும் நிலை மற்றும்அதனைத் தொடர்ந்து உருவாகும் சூழ்நிலையைப் பொறுத்தே நாடாளுமன்ற
பிரதிநிதிகள் குழுவின் பயணம் தொடர்பான முடிவு எடுக்கப்படும் என
தெரிவித்தார்.

சவுதி அரசாங்கத்துடன் இலங்கைக்கு கிடைத்துள்ள உத்தியோகபூர்வ தகவல்கள்சிவராசா அனோஜன் தொடர்பாக சவுதி அரேபிய அதிகாரிகளிடமிருந்து இலங்கைஅரசாங்கத்துக்கு கிடைத்துள்ள அனைத்து உத்தியோகபூர்வ கடிதங்கள் மற்றும்பதில்களையும் ஒக்டோபர் 7ஆம் திகதி வரை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவேண்டும் எனவும் சாணக்கியன் இராசமாணிக்கம் கேட்டுக்கொண்டார். மேலும்,சிவராசா அனோஜன் வேறு சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளாரா, அவ்வாறுமாற்றப்பட்டிருந்தால் எப்போது, எந்த சிறைச்சாலைக்கு, எந்த காரணத்திற்காகமாற்றப்பட்டார் என்பதையும் தெளிவுபடுத்துமாறு அவர் கோரினார்.

அத்துடன், அவர் தனது குடும்பத்தினருடன் தொடர்பு கொள்வதற்கு ஏதேனும்
கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதா, அவர் கடைசியாக எப்போது
குடும்பத்தினருடன் தொடர்புகொண்டார், இலங்கை தூதரக அதிகாரி ஒருவர்
கடைசியாக எப்போது அவரை நேரடியாக சந்தித்தார் என்பதையும்
தெளிவுபடுத்துமாறு அவர் கேட்டார்.

“இந்த விவகாரத்தை அரசியல் நோக்கத்துடன் எழுப்பவில்லை”
சிவராசா அனோஜன் விவகாரத்தை நாடாளுமன்றத்தில் மீண்டும் மீண்டும்
எழுப்புவதன் நோக்கம் அரசியல் செய்வதல்ல என சாணக்கியன் இராசமாணிக்கம்தெளிவுபடுத்தினார். சிவராசா அனோஜனின் குடும்பத்தினர் மற்றும் அவரதுபிரதேச மக்கள் தொடர்ந்து தங்களிடம் தகவல்களைக்
கேட்டுக்கொண்டிருப்பதாகவும், அந்தக் குடும்பத்தினரின் சார்பாகவே தாம்
நாடாளுமன்றத்தில் கேள்விகளை எழுப்புவதாகவும் அவர் தெரிவித்தார்.
“எங்களுக்கு அரசியல் தேவையில்லை. சிவராசா அனோஜனை விடுவிப்பதற்கான அனைத்துநடவடிக்கைகளுக்கும் முழுமையான ஆதரவை வழங்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.ஆனால் இந்தக் கேள்விகளுக்கான பதில்களும் எங்களுக்கு தேவை” என்றஅடிப்படையில் அவர் தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தினார்.

“சவுதி அரசாங்கத்தை விமர்சிப்பது அல்ல”
சிவராசா அனோஜனின் சிறைச்சாலை தாக்குதல் தொடர்பான தகவல்களில் ஏற்பட்டுள்ளமுரண்பாடு குறித்து கேள்வி எழுப்பியதன் நோக்கம் சவுதி அரேபிய அரசாங்கத்தைவிமர்சிப்பதோ அல்லது அதன் நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக்குவதோ அல்ல எனசாணக்கியன் இராசமாணிக்கம் மீண்டும் வலியுறுத்தினார். சவுதி அரசாங்கத்தின்மீது தமக்கு நம்பிக்கை இருப்பதாகவும், சவுதி தேசிய தின நிகழ்வுகளுக்கு
தொடர்ச்சியாக அழைக்கப்படும் சில தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களில் தாமும்ஒருவர் எனவும் அவர் தெரிவித்தார். எனவே, சவுதி அரசாங்கத்துக்கு எதிராகவோஅல்லது அந்த நாட்டைத் தாக்கும் வகையிலோ தாம் இந்த விடயத்தைமுன்வைக்கவில்லை என அவர் குறிப்பிட்டார். மாறாக, தமக்குக் கிடைத்துள்ளதகவல்களின்உண்மைத்தன்மையைஉறுதிப்படுத்துவதற்காகவே கேள்விகள்எழுப்பப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

குடும்பத்தினர் கூறும் தகவலும் அதிகாரிகள் கூறும் தகவலும் வேறுபடுகின்றனசிவராசா அனோஜனின் குடும்பத்தினருடன் தாம் தொடர்பு கொண்டுள்ளதாகவும்,அவர்களுக்கு கிடைத்த தொலைபேசி தகவல்களின் அடிப்படையில் சிவராசா அனோஜன்கத்தியால் தாக்கப்பட்டதாகவும் தலையில் காயம் ஏற்பட்டதாகவும்குடும்பத்தினர் தெரிவித்துள்ளதாக சாணக்கியன் இராசமாணிக்கம்குறிப்பிட்டார். அதேவேளை, சவுதி சிறைச்சாலை அதிகாரிகள் வழங்கியதகவலின்படி அது நகங்களால் ஏற்பட்ட கீறல் காயங்கள் எனதெரிவிக்கப்படுகின்றது. இந்த இரண்டு தகவல்களுக்கும் இடையில் காணப்படும்வேறுபாடு தொடர்பில் தெளிவு தேவை என அவர் வலியுறுத்தினார். குறிப்பாக,இலங்கை தூதரக அதிகாரிகள் சிறைச்சாலை அதிகாரிகளை மட்டுமே சந்தித்துதகவல்களைப் பெற்றார்களா அல்லது சிவராசா அனோஜனை நேரடியாகச் சந்தித்துஅவரது உடல்நிலையைப் பார்வையிடும் வாய்ப்பு கிடைத்ததா என்பது முக்கியமான
கேள்வி என அவர் குறிப்பிட்டார். இதற்குப் பதிலளித்த அமைச்சர், சவுதி
சிறைச்சாலை அதிகாரிகள் வழங்கிய தகவல்களே தாம் நாடாளுமன்றத்தில் முன்வைத்ததகவல்கள் எனத் தெரிவித்தார். இலங்கை தூதரக அதிகாரிகளுக்கு சிவராசா அனோஜனைநேரடியாகச் சந்திக்க அனுமதி வழங்கப்படவில்லை என்றும், அவரது உடல்நிலைதொடர்பான தகவல்கள் சிறைச்சாலை வைத்தியர் மற்றும் அதிகாரிகள் வழங்கியஅறிக்கையின் அடிப்படையிலேயே பெறப்பட்டதாகவும் அமைச்சர்தெளிவுபடுத்தினார்.

“தெரியாததைத் தெரியாது என்று கூறுவோம்” இந்த விவகாரத்தில்
உறுதிப்படுத்தப்படாத தகவல்களை பரப்புவது பொருத்தமற்றது எனவும் அமைச்சர்குறிப்பிட்டார். சவுதி அரசாங்கத்தின் அதிகாரிகள் மற்றும் வைத்தியர்கள்வழங்கிய தகவல்களின் அடிப்படையிலேயே அரசாங்கம் செயற்பட்டு வருவதாகவும்,சவுதி அரசாங்கத்தின் மீது நம்பிக்கை வைத்து இராஜதந்திர ரீதியில் இந்தநடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்தார். அத்துடன்,சிவராசா அனோஜனின் உடல்நிலை குறித்து நேரடியாகப் பார்த்து உறுதிப்படுத்தமுடியாத நிலையில், உறுதிப்படுத்தப்படாத தகவல்களை அடிப்படையாகக் கொண்டு
ஆயுதத்தால் தாக்கப்பட்டதாகவோ அல்லது தலையில் கடுமையான தாக்குதல்
நடத்தப்பட்டதாகவோ தகவல்களை பரப்புவது சவுதி அரசாங்கத்தின் நற்பெயருக்கும்பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என அவர் சுட்டிக்காட்டினார்.

நீதிமன்ற நடவடிக்கையில் தலையீடு செய்வதை சவுதி தரப்பு விரும்பவில்லை
சிவராசா அனோஜனின் வழக்கு தற்போது சவுதி அரேபியாவின் நீதிமன்றத்தில்
நிலுவையில் இருப்பதால், நீதிமன்ற நடவடிக்கையில் வெளிப்புற தலையீடு
செய்வதை சவுதி அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரிகள் விரும்பவில்லை எனவும்அமைச்சர் தெரிவித்தார். முதலில் உச்சநீதிமன்ற மேல்முறையீட்டு நடவடிக்கையைமுழுமையாக முன்னெடுப்பதே தற்போதைய முக்கிய நோக்கம் எனவும் அவர்விளக்கினார். மேன்முறையீட்டு நடவடிக்கையின் முடிவைப் பொறுத்து அடுத்தகட்ட இராஜதந்திர நடவடிக்கைகள், கருணை மனு அல்லது தண்டனையை குறைப்பதற்கானமுயற்சிகள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர்குறிப்பிட்டார்.

“சிவராசா அனோஜனை விடுவிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசுமேற்கொள்கிறது” சிவராசா அனோஜனுக்கு நிவாரணம் பெற்றுக்கொடுக்கும் நோக்கில்இலங்கை அரசாங்கம் சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு
வருவதாக வெளிவிவகார அமைச்சர் தெரிவித்தார். சவுதி அரேபியாவின் சட்டங்கள்மற்றும் அந்நாட்டில் நடைமுறையில் உள்ள நீதிமன்ற நடைமுறைகளுக்குமதிப்பளித்துக்கொண்டே, சிவராசா அனோஜனுக்கான சட்ட உதவிகளையும் இராஜதந்திரநடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருவதாகவும் அவர் கூறினார். இலங்கைமற்றும் சவுதி அரேபியா இடையிலான நீண்டகால நட்புறவு, பரஸ்பர மரியாதை
மற்றும் புரிந்துணர்வை தொடர்ந்தும் பேணிக்கொண்டு இந்த விவகாரம்
கையாளப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

ஒக்டோபர் 17க்கு முன்னர் முக்கியமான சட்ட நடவடிக்கை
சிவராசா அனோஜனின் வழக்கில் அடுத்த முக்கியமான கட்டமாக சவுதி அரேபியஉச்சநீதிமன்ற மேல்முறையீடு காணப்படுகின்றது.
அதற்கான இறுதி காலக்கெடு 2026 ஒக்டோபர் 17 என அமைச்சர் நாடாளுமன்றத்தில்தெரிவித்துள்ள நிலையில், அதற்கு முன்னதாகவே மேல்முறையீட்டை தாக்கல் செய்யஇலங்கை தரப்பு நடவடிக்கை எடுத்து வருகிறது. இலங்கை சட்ட நிபுணர்கள்மற்றும் சவுதி சட்ட ஆலோசகர்களின் கலந்துரையாடல்களின் பின்னர்மேல்முறையீடு தாக்கல் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதேவேளை, சவுதி அரசுத் தரப்பின் மேல்முறையீட்டு ஆவணம் உள்ளிட்ட இன்னும்கிடைக்க வேண்டிய சில ஆவணங்கள் கிடைத்தவுடன் அவை நாடாளுமன்றத்தில்
சமர்ப்பிக்கப்படும் என அமைச்சர் உறுதியளித்துள்ளார்.

மனிதாபிமான விடயமாக அணுகுமாறு வேண்டுகோள்
சிவராசா அனோஜனின் வழக்கு மிகவும் உணர்வுபூர்வமானதும் மனிதாபிமான
முக்கியத்துவம் கொண்டதுமான விவகாரம் என்பதால், அதனை அரசியல் அல்லதுதனிப்பட்ட நோக்கங்களுக்காக பயன்படுத்தாமல் பொறுப்புடன் அணுகுமாறுவெளிவிவகார அமைச்சர் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கேட்டுக்கொண்டார்.அதேவேளை, சிவராசா அனோஜனின் குடும்பத்தினருக்கும் அவர்களின் கவலைகளுக்கும்
உரிய முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும் என்பதையும் சாணக்கியன்
இராசமாணிக்கம் வலியுறுத்தியுள்ளார். இந்த விவகாரத்தில் தற்போதைய முக்கியகவனம் சிவராசா அனோஜனுக்கான சட்டப் பாதுகாப்பை உறுதிப்படுத்துதல்,உச்சநீதிமன்ற மேல்முறையீட்டை உரிய காலத்துக்குள் தாக்கல் செய்தல், அவரதுபாதுகாப்பு மற்றும் உடல்நிலையை உறுதிப்படுத்துதல் மற்றும் அடுத்தகட்டஇராஜதந்திர நடவடிக்கைகளை மேற்கொள்வதாக உள்ளது.

சவுதி அரசாங்கத்தை விமர்சிப்பது தமது நோக்கம் அல்ல என்றும், சிவராசா
அனோஜன் தொடர்பாக இலங்கை அரசாங்கத்துக்கும் குடும்பத்தினருக்கும்
கிடைக்கும் தகவல்கள் உண்மையானவையா என்பதை உறுதிப்படுத்தி, அவருக்குத்தேவையான அனைத்து உதவிகளும் கிடைக்க வேண்டும் என்பதே தமது நோக்கம் என்றும்சாணக்கியன் இராசமாணிக்கம் மீண்டும் தெளிவுபடுத்தியுள்ளார். சிவராசாஅனோஜனின் வழக்கில் ஒக்டோபர் 17ஆம் திகதிக்கு முன்னர் தாக்கல்செய்யப்படவுள்ள உச்சநீதிமன்ற மேல்முறையீடும், அதன் பின்னர்மேற்கொள்ளப்படவுள்ள சட்ட மற்றும் இராஜதந்திர நடவடிக்கைகளும் இந்தவிவகாரத்தின் அடுத்த முக்கிய கட்டங்களாக அமையவுள்ளன.

No comments: