News Just In

10/20/2026 04:03:00 PM

ஞானசார விடயத்தை தமிழீழ விடுதலை புலிகளுடன் கோர்த்து விடும் பயங்கர சதி! திரைமறைவில் செயற்படும் அரசியல் பலம்...

ஞானசார விடயத்தை தமிழீழ விடுதலை புலிகளுடன் கோர்த்து விடும் பயங்கர சதி! திரைமறைவில் செயற்படும் அரசியல் பலம்...




சந்தியா எக்னலிகொடவினாலே ஞானசார சிறைக்கு சென்றார் என்ற ஒரு கதையை உருவாக்கி சந்தியா எக்னலிகொட தமிழீழ விடுதலைப் புலிகளை சார்ந்தவர் இந்த பெண் புலியாலே இப்படி நடந்துள்ளதென்று சமூக ஊடகங்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பில் புதிய ஒரு கதையை உருவாக்க முயற்சிப்பதாக தெரியவந்துள்ளது.

இது தொடர்பில் சிங்கள சமூகத்தில் தற்போது மிகவும் பாரதூரமான தவறான பிரசாரங்கள் பரப்பப்பட்டு வருகின்றன. எக்னலிகொடவின் வழக்கு விசாரணைகளின் போது கேட்ட மூன்று கேள்விகளை மட்டும் எடுத்துக்கொண்டு,

அதற்கு அளிக்கப்பட்ட பதில்களின் சில பகுதிகளை மட்டும் கோட்டிட்டுக் காட்டி அதற்குப் பிறகு செய்த தெளிவுபடுத்தல்கள் எதையும் சேர்க்காமல் முற்றிலும் வேறு ஒரு கதையை உருவாக்க முயற்சித்துள்ளனர்.

சில ஊடகங்கள் இதற்கு பாரிய பிரசாரத்தை கொடுக்கின்றன. சமூக ஊடகங்களிலும் பகிரப்பட்டு வருகின்றன. மிகவும் கீழ்தரமான முறையில் திருமதி சந்தியா எக்னலிகொடவிற்கு எதிராக வஞ்சகப் பிரசாரம் நடந்து கொண்டிருக்கிறது.

அவரை ஒரு 'தமிழீழ விடுதலைப் புலி' என்று முத்திரை குத்துகிறார்கள். அதாவது தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்தவர்களுக்குக் கூடச் சொல்லாத விடயங்களை இவருக்குச் சொல்கிறார்கள்.

எக்னலிகொடவிற்கும் முன்னாள் போராளி முரளிக்கும் இடையே தொடர்புகள் எந்தக் காலத்தில் இருந்தனஇ யாருடன் சென்று எக்னலிகொட முரளியை சந்தித்தார் என்பன வழக்கில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

முரளி தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து விலகிய பின்னரே இவரைச் சந்திக்கிறார். அதன் பிறகே நெருங்கிய பழக்கம் ஏற்படுகிறது. மீண்டும் முரளி அமைப்பினால் சேர்த்துக்கொள்ளப்பட்ட பின்னர்இ சமாதான காலம் முடிந்த பிறகு முரளி உதவி கேட்டபோது எக்னலிகொட கூறுகிறார்:

'இல்லை நான் போருக்கு எதிரானவன். என்னால் ஒன்றும் செய்ய முடியாது எனக்கு விருப்பமில்லை' என்று. இதை முரளியும் நீதிமன்றத்தில் கூறியிருக்கின்றார். ஆனால் அந்தக் கதைகள் ஒன்றும் பேசப்படவில்லை.

இராணுவப் புலனாய்வுத் துறை உட்பட அனைத்துப் புலனாய்வுத் துறைகளும் எக்னலிகொட ஒரு குற்றவாளி அல்லஇ அவர் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் சம்பந்தப்படவில்லை என்று அறிக்கைகளை அளித்துள்ளன.
தவறான பரப்புரைகள்

அதையெல்லாம் விடுத்து தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த பெண் புலியான சந்தியா காரணமாகவே ஞானசார தேரர் சிறைக்குச் சென்றார் எனக் காட்ட முயற்சிக்கிறார்கள்.

ஞானசார தேரர் சிறைக்குச் சென்றது சந்தியா எக்னெலிகொடவினால் அல்ல.ஞானசார தேரர் சிறைக்குச் சென்றது அங்கே வேறு ஒரு வேலையைச் செய்யச் சென்றதனாலேயே ஆகும்.

ஏன் அது நடந்தது? அன்று வந்தவர்கள் எந்த வாகனங்களில் வந்தார்கள்? அதற்கு யார் செலவு செய்தது? என்பதைத் தனியாக ஆராய வேண்டும். அதை ஆராய்ந்தால் பல விடயங்கள் வெளியே வரும்.



இப்போது கூடச் சில விடயங்கள் ஆராயப்பட்டிருப்பதாக தெரியவந்துள்ளது. அப்படியிருக்கஇ இப்போது பரப்பப்படும் தவறான பிரசாரத்திற்கு ஆதரவு அளிக்கும் வகையில் மைத்திரிபால சிறிசேன பாக்கியசோதி சரவணமுத்து என்பவரின் அரச சார்பற்ற நிறுவனத்தின் மூலம் திருமதி சந்தியா எக்னலிகொட முறைப்பாடு செய்ததாக முற்றிலும் தவறான அப்பட்டமான பொய்யான தகவல்கள் பரப்பப்பட்டுள்ளன.

உண்மையில் ஞானசார தேரருக்குப் பொதுமன்னிப்புப் பெற்றுத்தர அல்ல இவர்கள் துடிக்கிறார்கள் என்பது இவர்களது நடத்தையிலிருந்து தெளிவாகத் தெரிகிறது. அதனால் எதிர்காலத்தில் இதைவிட பல விடயங்கள் நடக்கலாம் இதைவிட பல பொய்கள் சமூகத்தில் பரப்பப்படலாம்.



No comments: