News Just In

10/01/2026 04:29:00 PM

கோட்டாபயவின் ரிட் மனு நிராகரிப்பு – மேன்முறையீட்டு நீதிமன்றம் அதிரடி உத்தரவு

கோட்டாபயவின் ரிட் மனு நிராகரிப்பு – மேன்முறையீட்டு நீதிமன்றம் அதிரடி உத்தரவு



உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA) கீழ் தன்னைக் கைது செய்வதையோ அல்லது தடுத்து வைப்பதையோ தடுக்கும் உத்தரவைப் பிறப்பிக்குமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தாக்கல் செய்திருந்த ரிட் மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

குறித்த ரிட் மனு தொடர்பான சமர்ப்பிப்புகளை பரிசீலித்த மேன்முறையீட்டு நீதிமன்றம், அதனை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாமலேயே நிராகரிக்க உத்தரவிட்டுள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் நீதியரசர் ரொஹாந்த அபேசூரிய மற்றும் நீதியரசர் சரத் திஸாநாயக்க ஆகியோர் அடங்கிய இரு நீதியரசர்கள் கொண்ட குழாம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின் பின்னணியில், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தம்மை கைது செய்வதையோ அல்லது தடுத்து வைப்பதையோ தடுக்கும் வகையில் உத்தரவு பிறப்பிக்குமாறு கோட்டாபய ராஜபக்ஷ குறித்த மனுவை தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments: