News Just In

10/01/2026 06:24:00 AM

மட்டக்களப்பு கல்முனை சாலையில் ஒரே திசையில் பயணித்த அரச மற்றும் தனியார் பேரூந்துகள் மோதிவிபத்து !

மட்டக்களப்பு கல்முனை சாலையில் ஒரே திசையில்  பயணித்த அரச மற்றும் தனியார் பேரூந்துகள் மோதிவிபத்து !

 

நேற்று காலை மட்டக்களப்பு கல்முனை சாலை வழியே மட்டக்களப்பு பக்கமிருந்து கல்முனை பக்கம் நோக்கி ஒரே திசையில் பயணித்த அரச மற்றும் தனியார் பேரூந்துகள் களுதாவளை பிரதான வீதியில் வைத்து முன்னும் பின்னுமாக முட்டி மோதியுள்ளன.


இவ் விபத்தில் சிக்கிய அரச பேருந்து வீதியை விட்டு விலகி அருகிலிருந்த கோழி இறைச்சி விற்பனை நிலையத்திற்குள் புகுந்து கடையை முற்றுமுழுதாக சேதமடையச் செய்துள்ளன
இவ் இரு பேரூந்துகளும் ஒன்றை ஒன்று முந்திச் செல்ல முற்பட்ட வேளையிலே இந்த விபத்து சம்பவித்ததாக தெரிவிக்கப்படுகிறது
இவ் விபத்தில் இரு பேருந்துகளும் சேதத்தினை எதிர்கொண்டுள்ளன
விபத்து தொடர்பான விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

No comments: