நூருல் ஹுதா உமர்
அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சேகப்பற்று வயல் பகுதியில் நோய்வாய்ப்பட்ட நிலையில் காணப்பட்ட காட்டு யானை உயிரிழந்ததைத் தொடர்ந்து, அதன் உடல் இன்று (26) திங்கட்கிழமை அதே வயல் பகுதியில் அடக்கம் செய்யப்பட்டது.
சுமார் 25 முதல் 30 வயதுக்கு இடைப்பட்ட ஆண் காட்டு யானையொன்று நோய்வாய்ப்பட்ட நிலையில் காணப்பட்டதை அடுத்து, அதனைக் காப்பாற்றும் நோக்கில் கால்நடை மருத்துவக் குழுவினரும் வனவிலங்கு அதிகாரிகளும் இணைந்து சிகிச்சை நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தனர்.
எனினும், மருத்துவ சிகிச்சைகள் பலனளிக்காத நிலையில், குறித்த காட்டு யானை கடந்த 24ஆம் திகதி உயிரிழந்தது.
இதனையடுத்து, யானையின் உடலை அடக்கம் செய்வதற்கான நடவடிக்கைகள் இன்று முன்னெடுக்கப்பட்டன.
சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல். முஹம்மது ஹனீபாவின் வழிகாட்டுதலின் கீழ் இடம்பெற்ற இந்நடவடிக்கையின்போது, கிராம சேவகர் ஏ.பி.எம். றமிஸ் மற்றும் வனவிலங்கு அதிகாரிகள் உள்ளிட்டோர் அவ்விடத்தில் பிரசன்னமாகியிருந்தனர்.
நோய்வாய்ப்பட்ட காட்டு யானையைக் காப்பாற்றுவதற்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் பலனளிக்காத நிலையில், அதன் உயிரிழப்பு அப்பகுதியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

No comments: