News Just In

10/21/2026 06:12:00 AM

மயிலத்தமடு – மாதவனை மேய்ச்சல் தரை விவகாரம்: வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது!

மயிலத்தமடு – மாதவனை மேய்ச்சல் தரை விவகாரம்: வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது!பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம்


மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரை பிரச்சினை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் முன்னர் தாக்கல் செய்த வழக்கை மீள விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு கேட்டிருந்தோம்.அதற்கமைய மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

மாதவனை மேய்ச்சல் தரை பகுதியில் சட்டவிரோதமான முறையில் குடியமர்த்தப்பட்டவர்களை அந்த இடத்தில் இருந்து அகற்றுமாறு நீதிமன்றம் முன்னர் உத்தரவு பிறப்பித்திருந்தது.

நீதிமன்ற உத்தரவுக்கு அமைய குறித்த சட்டவிரோத குடியமர்த்தலை அகற்றுமாறு மகாவலி அபிவிருத்தி அதிகார சபை அறிவித்திருந்தது.

இருப்பினும் அந்த வாக்குறுதியை மகாவலி அபிவிருத்தி அதிகார சபை நிறைவேற்றவில்லை.தொடர்ச்சியாக அந்த பகுதியில் சட்டவிரோத குடியமர்த்தல்கள் இடம்பெற்றன.

இவ்வாறான பின்னணியில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

சட்டமா அதிபர் சார்பில் அரச தரப்பு சட்டத்தரணி இன்று மன்றில் முன்னிலையாகவில்லை. அதன் காரணமாக அவர்கள் காலவகாசம் கோரியுள்ளார்கள்..

நீதிமன்றம்,, புதிதாக ஆட்கள் வந்தாலும் அவர்களையும் சட்டத்தின் பிரகாரம் அவ்விடத்தில் இருந்து அகற்றலாம் என்று குறிப்பிட்டுள்ளது.

ஆகவே எதிர்வரும் விசாரணை திகதியின் போது அரச அதிகாரிகள்,மகாவலி அதிகார சபை சட்டவிரோத குடியிறுப்பாளர்களை சட்டத்தின் பிரகாரம் அகற்றி விட்டு நீதிமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பிப்பார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.

No comments: