News Just In

10/05/2026 08:05:00 AM

சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை - ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானம்

சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை - ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானம்!




சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்னவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றைச் சமர்ப்பிப்பதற்கான இறுதித் தீர்மானம் நாளை (05) நடைபெறவுள்ள எதிர்க்கட்சிக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பீ. பெரேரா தெரிவித்துள்ளார்.

சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைச் சமர்ப்பிப்பது தொடர்பில் பாராளுமன்ற எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த அனைத்துக் கட்சித் தலைவர்களும் கலந்துரையாடி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், குறித்த நம்பிக்கையில்லாப் பிரேரணை தற்போது வரைவு செய்யப்பட்டுள்ளதாகவும், அதனைச் சமர்ப்பிக்கும் திகதி குறித்து நாளை தீர்மானிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments: