News Just In

10/06/2026 12:31:00 PM

இலங்கையில் ஒரே ஆண்டில் 860 பேருக்குப் புதிதாக தொற்று! அடுத்த ஆபத்து இளைஞர்களுக்கா?

இலங்கையில் ஒரே ஆண்டில் 860 பேருக்குப் புதிதாக தொற்று! அடுத்த ஆபத்து இளைஞர்களுக்கா?



இலங்கையில் எச்.ஐ.வி தொற்றாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக தேசிய பால்வினை நோய் மற்றும் எய்ட்ஸ் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி, கடந்த ஆண்டு மாத்திரம் 860 புதிய எச்.ஐ.வி தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், நாட்டில் இதுவரை பதிவான மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 7,403 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த ஆண்டு இறுதிவரை 12 இலட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு எச்.ஐ.வி பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவற்றில் தொற்று கண்டறியப்பட்ட விகிதம் 0.07 சதவீதமாகப் பதிவாகியுள்ளது.

புதிதாக அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களில் ஆண்களின் எண்ணிக்கையே அதிகமாகக் காணப்படுவதுடன், ஆண் – பெண் விகிதம் 7:1 என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, 15 முதல் 24 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் மத்தியிலும் புதிய எச்.ஐ.வி தொற்றுகள் கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இலங்கை உள்ளிட்ட 21 நாடுகளில் எச்.ஐ.வி பரவல் அதிகரித்து வருவதாக ஐக்கிய நாடுகள் சபையின் எய்ட்ஸ் தொடர்பான தரவுகள் சுட்டிக்காட்டுவதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

No comments: