News Just In

10/11/2026 09:06:00 AM

பரபரப்பாகும் சவூதி விமான நிலைய தாக்குதல்! 12 பேர் பலி - பலரின் நிலைமை கவலைக்கிடம்: மூடப்படும் வான்வெளிகள்

பரபரப்பாகும் சவூதி விமான நிலைய தாக்குதல்! 12 பேர் பலி - பலரின் நிலைமை கவலைக்கிடம்: மூடப்படும் வான்வெளிகள்




சவூதி அரேபியாவின் தலைநகர் ரியாதில் உள்ள மன்னர் காலித் சர்வதேச விமான நிலைய பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் வௌிநாட்டவர்கள் உட்பட 12 பேர் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன், 309 பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். யேமனின் ஹூதி கிளர்ச்சியாளர்கள் தொடர்ச்சியாக தாக்குதல்களை நடத்தி வரும் நிலையில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
பலரின் நிலைமை கவலைக்கிடம்

சவூதி சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபையின் தகவல்படி, உயிரிழந்தவர்களில் 4 சவூதி பிரஜைகளும், 2 பங்களாதேஷ் பிரஜைகளும், அமெரிக்கா, ஜோர்டான், பாலஸ்தீனம், சிரியா, சூடான் மற்றும் எகிப்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த தலா ஒருவரும் அடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் காயமடைந்தவர்களில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த தாக்குதலையடுத்து மன்னர் காலித் சர்வதேச விமான நிலையத்தின் செயல்பாடுகள் அனைத்தும் உடனடியாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.

ரியாத்துக்கான அனைத்து விமானங்களும் வேறு வழிகளில் திருப்பி விடப்பட்டுள்ளதுடன் சில விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன.
விமான நிலைய பகுதியை தவிர்க்குமாறு அறிவுறுத்தல்

இதனையடுத்து குவைத் ஏர்வேஸ் உட்பட பல வளைகுடா விமான நிறுவனங்கள் தமது சேவைகளை உடனடியாக இடைநிறுத்தியுள்ளன.

இந்த தாக்குதலை ஹூதி கிளர்ச்சியாளர்களே நடத்தியதாக குற்றம்சாட்டியுள்ள சவூதி தலைமையிலான இராணுவ கூட்டிணைவுப்படையின் பேச்சாளர் மேஜர் ஜெனரல் துர்கி அல்-மாலிகி, இது ஒரு முழுமையான போர்க்குற்றம் என்றும், இதற்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.

எனவே நிலைமை சீராகும் வரை விமான நிலைய பகுதியை தவிர்க்குமாறு தங்களது குடிமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளன.

No comments: